• Mar 26 2025

மூதூரில் அதிகாலையில் அட்டகாசம் செய்த காட்டு யானைகள்..!

Sharmi / Mar 24th 2025, 11:11 am
image

மூதூர் பிரதேச சபையின் கீழ் உள்ள மல்லிகைத்தீவு உப அலுவலக வளாகத்திற்குள் இன்று(24) அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் பலத்த சேதங்களை விளைவித்துள்ளன.

இதன்போது பயன்தரும் வாழை மரங்கள்இதென்னை மரங்கள் காட்டு யானைகளால் துவம்சம் செய்யப்பட்டுள்ளன.

தற்போது நெல் அறுவடை நிறைவடைந்திருக்கின்ற நிலையில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

இதனால் யானை பாதுகாப்பு வேலி அமைத்துத்தர வேண்டுமெனவும் இல்லாவிடில் மக்களுக்கு உயிர் சேதங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

எனவே, இது விடயத்தில் உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



மூதூரில் அதிகாலையில் அட்டகாசம் செய்த காட்டு யானைகள். மூதூர் பிரதேச சபையின் கீழ் உள்ள மல்லிகைத்தீவு உப அலுவலக வளாகத்திற்குள் இன்று(24) அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் பலத்த சேதங்களை விளைவித்துள்ளன.இதன்போது பயன்தரும் வாழை மரங்கள்இதென்னை மரங்கள் காட்டு யானைகளால் துவம்சம் செய்யப்பட்டுள்ளன.தற்போது நெல் அறுவடை நிறைவடைந்திருக்கின்ற நிலையில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.இதனால் யானை பாதுகாப்பு வேலி அமைத்துத்தர வேண்டுமெனவும் இல்லாவிடில் மக்களுக்கு உயிர் சேதங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன.எனவே, இது விடயத்தில் உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement