• Nov 22 2024

கிளிநொச்சியில் காட்டு யானைகளின் அட்டகாசம்..! வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு தீர்வு எப்போது?

Sharmi / Jul 23rd 2024, 8:37 pm
image

கிளிநொச்சியில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சம்புக்குளம் மற்றும் நாவல் நகர் பகுதியில் தொடர்ச்சியாக காட்டு யானைகள் அழிவுகளை ஏற்படுத்தி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இரவு வேளைகளில் மக்கள் குடியிருப்புகளிற்குள் வரும் யானைகள் மறுநாள் காலை வரை மக்கள் குடியிருப்புகளில் காணப்படும் வாழ்வாதாரங்களை அழித்து வருகின்றது.

இதன் காரணமாக தனிமையில் இருப்பவர்கள் மற்றும் முதியவர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி இரவு வேளைகளில் அயலவர்கள் வீடுகளில் தஞ்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர். 

நேற்றைய தினம் இரவும் மக்கள் குடியிருப்புகளில் காட்டு யானை புகுத்து 20க்கும் மேற்பட்ட தென்னை மற்றும் 40-க்கும் மேற்பட்ட வாழைகளை அழித்து பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. 

இப்பகுதிகளில் தொடர்ச்சியாக மக்கள் வாழ்வாதாரங்களை அழிப்பது தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கின்றனர். 

யானையை துரத்துவதற்கு முயன்ற மக்களை மீண்டும் யானைகள் துரத்தி உள்ளதாகவும், இதன் போது ஒருவரது வீட்டு கதவை யானை உடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை, அப்பகுதியில் வாழும் மக்கள் தொடர்ச்சியாக காட்டு யானைகளால் பாதிக்கப்படுவதாகவும், தமது பகுதிக்கு நிரந்தரமான ஒரு யானை வேலியை அமைத்துத் தந்து எமது உயிர்களையும், வாழ்வாதாரத்தையும் காப்பாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.


கிளிநொச்சியில் காட்டு யானைகளின் அட்டகாசம். வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு தீர்வு எப்போது கிளிநொச்சியில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சம்புக்குளம் மற்றும் நாவல் நகர் பகுதியில் தொடர்ச்சியாக காட்டு யானைகள் அழிவுகளை ஏற்படுத்தி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.இரவு வேளைகளில் மக்கள் குடியிருப்புகளிற்குள் வரும் யானைகள் மறுநாள் காலை வரை மக்கள் குடியிருப்புகளில் காணப்படும் வாழ்வாதாரங்களை அழித்து வருகின்றது.இதன் காரணமாக தனிமையில் இருப்பவர்கள் மற்றும் முதியவர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி இரவு வேளைகளில் அயலவர்கள் வீடுகளில் தஞ்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் இரவும் மக்கள் குடியிருப்புகளில் காட்டு யானை புகுத்து 20க்கும் மேற்பட்ட தென்னை மற்றும் 40-க்கும் மேற்பட்ட வாழைகளை அழித்து பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதிகளில் தொடர்ச்சியாக மக்கள் வாழ்வாதாரங்களை அழிப்பது தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கின்றனர். யானையை துரத்துவதற்கு முயன்ற மக்களை மீண்டும் யானைகள் துரத்தி உள்ளதாகவும், இதன் போது ஒருவரது வீட்டு கதவை யானை உடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதேவேளை, அப்பகுதியில் வாழும் மக்கள் தொடர்ச்சியாக காட்டு யானைகளால் பாதிக்கப்படுவதாகவும், தமது பகுதிக்கு நிரந்தரமான ஒரு யானை வேலியை அமைத்துத் தந்து எமது உயிர்களையும், வாழ்வாதாரத்தையும் காப்பாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement