• May 19 2024

சார்ள்ஸின் பதவி விலகல் தேர்தல் நடவடிக்கைகளை பாதிப்பா? – தேர்தல்கள் ஆணைக்குழு விளக்கம்

Chithra / Jan 26th 2023, 12:22 pm
image

Advertisement

சார்ள்ஸின் பதவி விலகல் தேர்தல் நடவடிக்கைகளை பாதிக்காது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களில் இராஜினாமா குறித்து தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், பி.எஸ்.எம்.சார்ள்ஸின் பதவி விலகல் குறித்து இதுவரை தங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்களுக்கு குறிப்பிட்ட உறுப்பினரோ அல்லது உரிய அதிகாரசபையோ இது குறித்து  அறிவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு உறுப்பினர் பதவி விலகியமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் அவர் கூறியுள்ளார்.

சார்ள்ஸின் பதவி விலகல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், இதன் காரணமாக உள்ளுராட்சி தேர்தல்கள் தாமதமாகலாம் என்ற கருத்தும் உருவாகியுள்ளது.

எனினும் ஐந்து உறுப்பினர்களை கொண்ட தேர்தல் ஆணைக்குழுவினால் ஆகக்குறைந்தது மூன்று உறுப்பினர்களுடன் பணியாற்ற முடியும்.

எனவே சார்ள்ஸின் பதவி இராஜினாமா தேர்தல் நடவடிக்கைகளை பாதிக்காது என நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

சார்ள்ஸின் பதவி விலகல் தேர்தல் நடவடிக்கைகளை பாதிப்பா – தேர்தல்கள் ஆணைக்குழு விளக்கம் சார்ள்ஸின் பதவி விலகல் தேர்தல் நடவடிக்கைகளை பாதிக்காது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.ஊடகங்களில் இராஜினாமா குறித்து தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், பி.எஸ்.எம்.சார்ள்ஸின் பதவி விலகல் குறித்து இதுவரை தங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தங்களுக்கு குறிப்பிட்ட உறுப்பினரோ அல்லது உரிய அதிகாரசபையோ இது குறித்து  அறிவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ஒரு உறுப்பினர் பதவி விலகியமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் அவர் கூறியுள்ளார்.சார்ள்ஸின் பதவி விலகல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், இதன் காரணமாக உள்ளுராட்சி தேர்தல்கள் தாமதமாகலாம் என்ற கருத்தும் உருவாகியுள்ளது.எனினும் ஐந்து உறுப்பினர்களை கொண்ட தேர்தல் ஆணைக்குழுவினால் ஆகக்குறைந்தது மூன்று உறுப்பினர்களுடன் பணியாற்ற முடியும்.எனவே சார்ள்ஸின் பதவி இராஜினாமா தேர்தல் நடவடிக்கைகளை பாதிக்காது என நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement