• Sep 21 2024

ஆட்சியாளர்களுக்கு எதிராக சட்டங்கள் உருவாக்கப்படுமா??? – ரணிலுக்கு அதிக நன்மை ஏற்படும்..! samugammedia

Chithra / Jun 21st 2023, 5:01 pm
image

Advertisement

இலங்கையில் உருவாக்கப்படுகின்ற பெரும்பாலான சட்டங்கள் நாட்டிற்காகவோ அல்லது மக்களுக்காகவோ உருவாக்கப்படுவதில்லை என்றும் மாறாக ஆட்சியில் உள்ளவர்களுக்காகவே உருவாக்கப்படுவதாக சமூக செயற்பாட்டாளர் கந்தையா அருந்தவபாலன் குற்றம் சுமத்தியுள்ளார்.

சாவகச்சேரியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.

ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தினை மிக அவதானமாக கையாள வேண்டும். ஏனெனில் இலங்கை போன்ற நாடுகளில் நிர்வாகம் மற்றும் நிதித்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டிருப்பதால்

மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாப்பதிலும், ஆளுபவர்களுடைய அதிகார துஸ்பிரயோகங்களை வெளிகொண்டு வருவதிலும் ஊடகங்கள் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றன.

அந்தவகையில் ஊடகங்களை ஒழுங்குபடுத்துகின்ற சட்டங்கள், ஆட்சியாளர்கள் தமக்குத் தேவையான வகையில் செயற்படுவதற்கான அனுமதியை வழங்குவதாக இருக்கக்கூடாது என்பதில் சகலரும் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.

இலங்கையில் உருவாக்கப்படுகின்ற பெரும்பாலான சட்டங்கள் நாட்டிற்கானவையாகவோ அல்லது மக்களுக்கானவையாகவோ இருப்பதனை விட ஆட்சியில் உள்ளவர்களுக்காகவே பெரும்பாலும் உருவாக்குவதனை கடந்த கால வரலாறுகள் எடுத்துக்காட்டுகின்றன. 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கு ஏற்ற வகையில், எதிர்காலத்தில் உருவாகக்கூடிய மக்களின் எதிர்ப்புக்களை அடக்குகின்ற நடவடிக்கைக்கு, ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை கொண்டு சென்று விடுவாரோ என்ற ஐயம் எம் மத்தியில் உள்ளது.

அதாவது ஆட்சியாளர்கள் தமக்கு எதிராக இருக்கக்கூடிய மற்றும் மக்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய ஊடகங்களை இல்லாமல் ஒழிக்கும் அல்லது அடக்குகின்ற சட்டமாகவே இது பார்க்கப்படுகிறது

ஆட்சியாளர்களுக்கு எதிராக சட்டங்கள் உருவாக்கப்படுமா – ரணிலுக்கு அதிக நன்மை ஏற்படும். samugammedia இலங்கையில் உருவாக்கப்படுகின்ற பெரும்பாலான சட்டங்கள் நாட்டிற்காகவோ அல்லது மக்களுக்காகவோ உருவாக்கப்படுவதில்லை என்றும் மாறாக ஆட்சியில் உள்ளவர்களுக்காகவே உருவாக்கப்படுவதாக சமூக செயற்பாட்டாளர் கந்தையா அருந்தவபாலன் குற்றம் சுமத்தியுள்ளார்.சாவகச்சேரியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தினை மிக அவதானமாக கையாள வேண்டும். ஏனெனில் இலங்கை போன்ற நாடுகளில் நிர்வாகம் மற்றும் நிதித்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டிருப்பதால்மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாப்பதிலும், ஆளுபவர்களுடைய அதிகார துஸ்பிரயோகங்களை வெளிகொண்டு வருவதிலும் ஊடகங்கள் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றன.அந்தவகையில் ஊடகங்களை ஒழுங்குபடுத்துகின்ற சட்டங்கள், ஆட்சியாளர்கள் தமக்குத் தேவையான வகையில் செயற்படுவதற்கான அனுமதியை வழங்குவதாக இருக்கக்கூடாது என்பதில் சகலரும் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.இலங்கையில் உருவாக்கப்படுகின்ற பெரும்பாலான சட்டங்கள் நாட்டிற்கானவையாகவோ அல்லது மக்களுக்கானவையாகவோ இருப்பதனை விட ஆட்சியில் உள்ளவர்களுக்காகவே பெரும்பாலும் உருவாக்குவதனை கடந்த கால வரலாறுகள் எடுத்துக்காட்டுகின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கு ஏற்ற வகையில், எதிர்காலத்தில் உருவாகக்கூடிய மக்களின் எதிர்ப்புக்களை அடக்குகின்ற நடவடிக்கைக்கு, ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை கொண்டு சென்று விடுவாரோ என்ற ஐயம் எம் மத்தியில் உள்ளது.அதாவது ஆட்சியாளர்கள் தமக்கு எதிராக இருக்கக்கூடிய மற்றும் மக்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய ஊடகங்களை இல்லாமல் ஒழிக்கும் அல்லது அடக்குகின்ற சட்டமாகவே இது பார்க்கப்படுகிறது

Advertisement

Advertisement

Advertisement