• May 17 2024

ஒரு மில்லியன் குரங்குகள் சீனாவுக்கு ஏற்றுமதியா..? – மனு விசாரணை நிறுத்தம் samugammedia

Chithra / Sep 13th 2023, 10:08 am
image

Advertisement

ஒரு மில்லியன் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை தடுக்கும் வகையில் ஆணை பிறப்பிக்குமாறு விலங்கு பாதுகாப்பு அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை முடித்து வைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் இருந்து சீனாவிற்கு ஒரு இலட்சம் குரங்குகளை பரிசோதனை நோக்கத்திற்காக ஏற்றுமதி செய்வதை தடுக்குமாறு ஆணை பிறப்பிக்குமாறு கோரி 30 விலங்கு பாதுகாப்பு அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த மனுக்களின் விசாரணையை முடிவுக்கு கொண்டு வந்தது.

நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் சமத் மொரயாஸ் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

இலங்கை வனவிலங்கு பாதுகாப்பு சங்கம், சுற்றாடல் ஆர்வலர் ருக்ஷான் ஜயவர்தன, மாத்தறை ஆனந்த தேரர் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சரவை உட்பட முப்பது பேர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து ஒரு இலட்சம் குரங்குகளை பரிசோதனைக்காக சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய தயாராகி வருவதாக ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கை விலங்கு வதை சட்டம் மற்றும் வனம் மற்றும் தாவரங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரானது என்றும், இது சட்டவிரோதமான செயல் என்றும், எனவே, இந்த முடிவை செல்லாது என்று அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டமா அதிபர், நீதிமன்றில் உறுதிமொழி ஒன்றை வழங்கியதுடன், மேற்படி குரங்குகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு எவ்வித ஆயத்தமும் இல்லை என தெரிவித்தார்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அரசு அளித்த உறுதிமொழி திருப்தி அளிப்பதாகவும், மனுவைத் தொடர வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தனர்.

அந்த உறுதிமொழியை ஏற்று, மேன்முறையீட்டு நீதிமன்றம் மனு மீதான விசாரணையை முடித்து வைக்க முடிவு செய்தது. மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன ஆஜராகியிருந்தார்.

ஒரு மில்லியன் குரங்குகள் சீனாவுக்கு ஏற்றுமதியா. – மனு விசாரணை நிறுத்தம் samugammedia ஒரு மில்லியன் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை தடுக்கும் வகையில் ஆணை பிறப்பிக்குமாறு விலங்கு பாதுகாப்பு அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை முடித்து வைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.இலங்கையில் இருந்து சீனாவிற்கு ஒரு இலட்சம் குரங்குகளை பரிசோதனை நோக்கத்திற்காக ஏற்றுமதி செய்வதை தடுக்குமாறு ஆணை பிறப்பிக்குமாறு கோரி 30 விலங்கு பாதுகாப்பு அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த மனுக்களின் விசாரணையை முடிவுக்கு கொண்டு வந்தது.நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் சமத் மொரயாஸ் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.இலங்கை வனவிலங்கு பாதுகாப்பு சங்கம், சுற்றாடல் ஆர்வலர் ருக்ஷான் ஜயவர்தன, மாத்தறை ஆனந்த தேரர் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சரவை உட்பட முப்பது பேர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.இலங்கையில் இருந்து ஒரு இலட்சம் குரங்குகளை பரிசோதனைக்காக சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய தயாராகி வருவதாக ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நடவடிக்கை விலங்கு வதை சட்டம் மற்றும் வனம் மற்றும் தாவரங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரானது என்றும், இது சட்டவிரோதமான செயல் என்றும், எனவே, இந்த முடிவை செல்லாது என்று அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டமா அதிபர், நீதிமன்றில் உறுதிமொழி ஒன்றை வழங்கியதுடன், மேற்படி குரங்குகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு எவ்வித ஆயத்தமும் இல்லை என தெரிவித்தார்.மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அரசு அளித்த உறுதிமொழி திருப்தி அளிப்பதாகவும், மனுவைத் தொடர வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தனர்.அந்த உறுதிமொழியை ஏற்று, மேன்முறையீட்டு நீதிமன்றம் மனு மீதான விசாரணையை முடித்து வைக்க முடிவு செய்தது. மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன ஆஜராகியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement