• Sep 20 2024

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு..! - மொட்டு எம்.பி அதிரடி அறிவிப்பு!

Chithra / Jun 19th 2024, 12:40 pm
image

Advertisement

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து உறுதியான பதிலுக்காக காத்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பிலிபிட்டிய மகாவலி விளையாட்டரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு நேரடியாக ஆதரவளித்து அவரை வெற்றிபெறச் செய்வேன் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை பாதாளத்தில் வீழ்ந்திருந்த நாட்டிற்கு சரியான வேலைத்திட்டத்தை முன்வைத்த ரணில் விக்கிரமசிங்க நாட்டை சரியாக ஆட்சி செய்கின்றார்.

மேலும் இந்த நேரத்தில் நாம் அனைவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து உழைக்க வேண்டும். இல்லையெனில் நாடு மீண்டும் பாதாளத்தில் விழும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு. - மொட்டு எம்.பி அதிரடி அறிவிப்பு  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து உறுதியான பதிலுக்காக காத்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பிலிபிட்டிய மகாவலி விளையாட்டரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு நேரடியாக ஆதரவளித்து அவரை வெற்றிபெறச் செய்வேன் என அவர் தெரிவித்தார்.இதேவேளை பாதாளத்தில் வீழ்ந்திருந்த நாட்டிற்கு சரியான வேலைத்திட்டத்தை முன்வைத்த ரணில் விக்கிரமசிங்க நாட்டை சரியாக ஆட்சி செய்கின்றார்.மேலும் இந்த நேரத்தில் நாம் அனைவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து உழைக்க வேண்டும். இல்லையெனில் நாடு மீண்டும் பாதாளத்தில் விழும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement