• May 04 2024

ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் ஊடகவியலாளர்களை கட்டுப்படுத்துமா? அமைச்சர் மனுஷ வழங்கிய பதில்! samugammedia

Tamil nila / Jun 4th 2023, 11:11 pm
image

Advertisement

உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் ஊடகவியலாளர்களை கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்படவில்லையென ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் உறுப்பினர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

காலியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம். இது ஊடகவியலாளர்களை கட்டுப்படுத்தவோ அல்லது யாரையாவதோ கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட ஒன்றல்ல. ஆனால் நாட்டில் செய்திகளை ஒளிபரப்பும்போதும், செய்திகளை அறிக்கையிடும்போது, தகவல்களை வாங்கும்போதும் அதற்கான பொறுப்பு இருக்கவேண்டும்.

இப்பொழுது அதிகமான சந்தர்ப்பங்களில் தகவல்கள் எவ்வித பொறுப்பும் இல்லாமல் ஒளிபரப்பாகின்றது. இறுதியில் பொறுப்பு கூறுவதற்கு எவரும் இல்லை.

இதனால், சிறந்த ஊடக செயற்பாட்டுக்காக ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டம் கொண்டுவரப்படுகிறது. இதில் ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்கான எவ்வித நோக்கமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.


ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் ஊடகவியலாளர்களை கட்டுப்படுத்துமா அமைச்சர் மனுஷ வழங்கிய பதில் samugammedia உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் ஊடகவியலாளர்களை கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்படவில்லையென ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் உறுப்பினர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.காலியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,இது ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம். இது ஊடகவியலாளர்களை கட்டுப்படுத்தவோ அல்லது யாரையாவதோ கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட ஒன்றல்ல. ஆனால் நாட்டில் செய்திகளை ஒளிபரப்பும்போதும், செய்திகளை அறிக்கையிடும்போது, தகவல்களை வாங்கும்போதும் அதற்கான பொறுப்பு இருக்கவேண்டும்.இப்பொழுது அதிகமான சந்தர்ப்பங்களில் தகவல்கள் எவ்வித பொறுப்பும் இல்லாமல் ஒளிபரப்பாகின்றது. இறுதியில் பொறுப்பு கூறுவதற்கு எவரும் இல்லை.இதனால், சிறந்த ஊடக செயற்பாட்டுக்காக ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டம் கொண்டுவரப்படுகிறது. இதில் ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்கான எவ்வித நோக்கமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement