• Sep 19 2024

முட்டை விலை குறைவடைந்தால், வெதுப்பக உற்பத்திகளின் விலை குறைக்கப்படுமா?

Tamil nila / Dec 25th 2022, 10:49 pm
image

Advertisement

முட்டை விலை குறைவடைந்தால், பாண் உள்ளிட்ட ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலையினை குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், கருத்துரைத்த என்.கே ஜயவர்தன, தற்போது முட்டையொன்று 60 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார்.

ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட முட்டைகள் வெதுப்பகத்துறைக்கு பயன்படுத்தப்படுகின்றன.

எனினும், தற்போது முட்டை விலை அதிகரிப்பினால் வெதுப்பக உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் உயர்ந்துள்ளன.

எனவே முட்டை விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தால், வெதுப்பக உற்பத்திகளையும் குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே ஜவர்தன தெரிவித்துள்ளார்.

முட்டை விலை குறைவடைந்தால், வெதுப்பக உற்பத்திகளின் விலை குறைக்கப்படுமா முட்டை விலை குறைவடைந்தால், பாண் உள்ளிட்ட ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலையினை குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில், கருத்துரைத்த என்.கே ஜயவர்தன, தற்போது முட்டையொன்று 60 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார்.ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட முட்டைகள் வெதுப்பகத்துறைக்கு பயன்படுத்தப்படுகின்றன.எனினும், தற்போது முட்டை விலை அதிகரிப்பினால் வெதுப்பக உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளன.இதனால் வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் உயர்ந்துள்ளன.எனவே முட்டை விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தால், வெதுப்பக உற்பத்திகளையும் குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே ஜவர்தன தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement