• Sep 24 2024

ஜனாதிபதி ரணிலுக்கும் வைத்தியர் அர்ச்சுனாவுக்கும் இடையே நாளை கலந்துரையாடல் இடம்பெறுமா?

Tamil nila / Jul 13th 2024, 10:02 pm
image

Advertisement

வைத்தியர் அர்ஜுனா அவர்கள் நாளையதினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வைத்தியர் அர்ஜுனா அவர்கள் வடக்கு சுகாதாரத் துறையில் காணப்பட்ட பல்வேறு ஊழல்களை வெளிப்படுத்தி இருந்த நிலையில், அது குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது. அத்துடன் இன்றையதினம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரை வைத்தியர் அர்ஜுனா அவர்கள் சந்தித்து குறித்த பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாகவும் அறிய முடிகிறது.

அத்துடன் எதிர்வரும் திங்கட்கிழமை சுகாதார அமைச்சின் முக்கிய அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் மக்கள் தமது பிரச்சினைகளை அவர்களிடத்தில் நேரடியாக எழுத்து மூலமாக தெரிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கிற்கு விஜயம் செய்ய உள்ள சுகாதார அமைச்சின் அதிகாரிகள் ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வடக்கு மருத்துவத்துறையை ஊழல் மோசடிகளில் இருந்து காப்பாற்றுவார்களா என்ற ஆவல் மக்களிடத்தே ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஜனாதிபதி ரணிலுக்கும் வைத்தியர் அர்ச்சுனாவுக்கும் இடையே நாளை கலந்துரையாடல் இடம்பெறுமா வைத்தியர் அர்ஜுனா அவர்கள் நாளையதினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.வைத்தியர் அர்ஜுனா அவர்கள் வடக்கு சுகாதாரத் துறையில் காணப்பட்ட பல்வேறு ஊழல்களை வெளிப்படுத்தி இருந்த நிலையில், அது குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது. அத்துடன் இன்றையதினம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரை வைத்தியர் அர்ஜுனா அவர்கள் சந்தித்து குறித்த பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாகவும் அறிய முடிகிறது.அத்துடன் எதிர்வரும் திங்கட்கிழமை சுகாதார அமைச்சின் முக்கிய அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் மக்கள் தமது பிரச்சினைகளை அவர்களிடத்தில் நேரடியாக எழுத்து மூலமாக தெரிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.வடக்கிற்கு விஜயம் செய்ய உள்ள சுகாதார அமைச்சின் அதிகாரிகள் ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வடக்கு மருத்துவத்துறையை ஊழல் மோசடிகளில் இருந்து காப்பாற்றுவார்களா என்ற ஆவல் மக்களிடத்தே ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement