• Nov 24 2024

முல்லை வட்டுவாகல் பாலத்திற்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா? அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்...! samugammedia

Sharmi / Jan 8th 2024, 10:27 am
image

முல்லைத்தீவு நகரத்திற்கான பிரதான பாதைகளில் ஒன்றாக காணப்படுகின்ற ஏ-35 தர வீதியின் வட்டுவாகல் பாலமானது எந்தவித புனரமைப்புக்களுமின்றி மிக மோசமாக சேதமடைந்து காணப்படுகின்றது.

இவ்வாறு சேதமடைந்து காணப்படும் பாலமானது அடிக்கடி உடைவுகள் ஏற்படும்போது தற்காலிக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றதே தவிர நிரந்தர புனரமைப்புகள் மேற்கொள்ளப்படவில்லை. 

தற்போது ஆபத்தான நிலையில் வட்டுவாகல் பாலத்தில் பல்வேறு இடங்களில் வெடிப்புக்களும் வீதி பாதுகாப்பு அற்றதாகவும் வீதியில் சில இடங்களில் தாழிறங்கியும் காணப்படுகிறது. பலதடவைகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எடுத்து கூறியும் புனரமைப்பு பணிகள் எவையும் நடைபெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை குறித்த பாலத்தினூடாக ஆபத்தான முறையில் பிரயாணிகள் பயணம் செய்யவேண்டிய நிலை காணப்படுவதனால் குறித்த பாலத்தினை சீரமைத்து தரும்படி அப்பாலத்தினூடாக பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு குறித்த வீதியில் அமைந்துள்ள பாலத்தில் போக்குவரத்தில், பெரிய வாகனம் ஒன்றே பயணம் செய்ய முடியும். ஏனைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு குறித்த வாகனம் வீதியை கடந்ததன் பிற்பாடே பயணம் செய்ய முடியும். அவ்வாறு வாகனம் வருவதனை அவதானிக்காது சென்றால் மீண்டும் ஒரு வாகனம் பின்னோக்கி சென்றதன் பின்னரே பயணிக்க முடியும். இவ்வாறாகவே குறித்த பாலத்தில் பயணம் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலையுள்ளது.

ஆகவே, இவ் பாலத்தில் வீதியின் இரு பக்கங்களிலும் சமிக்ஞை விளக்குகள் அமைக்கப்படவில்லை இதனால் வாகன சாரதிகள் பெரும் இடர்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



முல்லை வட்டுவாகல் பாலத்திற்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா அச்சத்துடன் பயணிக்கும் மக்கள். samugammedia முல்லைத்தீவு நகரத்திற்கான பிரதான பாதைகளில் ஒன்றாக காணப்படுகின்ற ஏ-35 தர வீதியின் வட்டுவாகல் பாலமானது எந்தவித புனரமைப்புக்களுமின்றி மிக மோசமாக சேதமடைந்து காணப்படுகின்றது.இவ்வாறு சேதமடைந்து காணப்படும் பாலமானது அடிக்கடி உடைவுகள் ஏற்படும்போது தற்காலிக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றதே தவிர நிரந்தர புனரமைப்புகள் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது ஆபத்தான நிலையில் வட்டுவாகல் பாலத்தில் பல்வேறு இடங்களில் வெடிப்புக்களும் வீதி பாதுகாப்பு அற்றதாகவும் வீதியில் சில இடங்களில் தாழிறங்கியும் காணப்படுகிறது. பலதடவைகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எடுத்து கூறியும் புனரமைப்பு பணிகள் எவையும் நடைபெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை குறித்த பாலத்தினூடாக ஆபத்தான முறையில் பிரயாணிகள் பயணம் செய்யவேண்டிய நிலை காணப்படுவதனால் குறித்த பாலத்தினை சீரமைத்து தரும்படி அப்பாலத்தினூடாக பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.அத்தோடு குறித்த வீதியில் அமைந்துள்ள பாலத்தில் போக்குவரத்தில், பெரிய வாகனம் ஒன்றே பயணம் செய்ய முடியும். ஏனைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு குறித்த வாகனம் வீதியை கடந்ததன் பிற்பாடே பயணம் செய்ய முடியும். அவ்வாறு வாகனம் வருவதனை அவதானிக்காது சென்றால் மீண்டும் ஒரு வாகனம் பின்னோக்கி சென்றதன் பின்னரே பயணிக்க முடியும். இவ்வாறாகவே குறித்த பாலத்தில் பயணம் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலையுள்ளது.ஆகவே, இவ் பாலத்தில் வீதியின் இரு பக்கங்களிலும் சமிக்ஞை விளக்குகள் அமைக்கப்படவில்லை இதனால் வாகன சாரதிகள் பெரும் இடர்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement