• Jan 11 2025

யாழ்ப்பாணத்தில் முக்கிய பொருட்களுடன் சிக்கிய பெண்!

Chithra / Dec 29th 2024, 10:31 am
image

  

யாழ்ப்பாணம் - ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (28) சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியின் கீழ் இயங்கும் பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில்  41 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 5 ஆயிரத்து 830 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஆயிரத்து எழுபது மில்லிக்கிராம் ஹெரோயின் என்பன மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் முக்கிய பொருட்களுடன் சிக்கிய பெண்   யாழ்ப்பாணம் - ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (28) சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியின் கீழ் இயங்கும் பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.சம்பவத்தில்  41 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 5 ஆயிரத்து 830 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஆயிரத்து எழுபது மில்லிக்கிராம் ஹெரோயின் என்பன மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement