• Oct 30 2024

33 பேரை ஏமாற்றி பெண் - 81 இலட்சத்துடன் சுற்றியவர் சிக்கினார்.! samugammedia

Tamil nila / May 20th 2023, 5:43 pm
image

Advertisement

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பினை பெற்றுத் தருவதாக கூறி சுமார் 81 இலட்சம் ரூபாவினை ஏமாற்றி மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்ற சந்தேக நபர், இஸ்ரேல் மற்றும் கட்டார் ஆயிக நாடுகளில் தாதியர் சேவை மற்றும் ஹோட்டல் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 33 பேரை ஏமாற்றியது விசாரணையின் மூலம் தற்போது வெளியாகியுள்ளது.

ஹலவத்தை நீதிமன்றில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபரை கைது செய்வதற்கான உத்தரவு கிடைத்திருந்த நிலையில், நிகவெரட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏமாற்றியவர், ஹலவத்த பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

33 பேரை ஏமாற்றி பெண் - 81 இலட்சத்துடன் சுற்றியவர் சிக்கினார். samugammedia வெளிநாடுகளில் வேலைவாய்ப்பினை பெற்றுத் தருவதாக கூறி சுமார் 81 இலட்சம் ரூபாவினை ஏமாற்றி மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்ற சந்தேக நபர், இஸ்ரேல் மற்றும் கட்டார் ஆயிக நாடுகளில் தாதியர் சேவை மற்றும் ஹோட்டல் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 33 பேரை ஏமாற்றியது விசாரணையின் மூலம் தற்போது வெளியாகியுள்ளது.ஹலவத்தை நீதிமன்றில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபரை கைது செய்வதற்கான உத்தரவு கிடைத்திருந்த நிலையில், நிகவெரட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.ஏமாற்றியவர், ஹலவத்த பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement