• Apr 23 2025

களவுக்கு சென்ற இளைஞன் தாக்கியதில் மூதாட்டி பலி! பருத்தித்துறையில் நடந்த பயங்கரம்

Chithra / Apr 20th 2025, 3:37 pm
image


யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் களவுக்கு சென்ற இளைஞன் தாக்கியதில் 69 வயதுடைய மூதாட்டி ஒருவர் பலியாகியுள்ளார்.

இச் சம்பவம் இன்றையதினம் (20) காலை இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த வீட்டில் இரண்டு வயோதிப பெண்கள் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் ஒருவர் இன்று காலை தேவாலயத்திற்கு சென்றுள்ளார். 

இருவரும் தேவாலயத்திற்கு சென்றிருப்பார்கள் என்ற எண்ணத்தில் 20 வயதான, அயல்வீட்டு இளைஞன் திருடுவதற்தாக அங்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த வயோதிப பெண் அந்த இளைஞனை கண்டவேளை அந்த இளைஞன் கொட்டன் ஒன்றினால் குறித்த பெண்ணை தாக்கி கொலை செய்துள்ளார்.

தடயவியல் பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர். 

களவுக்கு சென்ற இளைஞன் தாக்கியதில் மூதாட்டி பலி பருத்தித்துறையில் நடந்த பயங்கரம் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் களவுக்கு சென்ற இளைஞன் தாக்கியதில் 69 வயதுடைய மூதாட்டி ஒருவர் பலியாகியுள்ளார்.இச் சம்பவம் இன்றையதினம் (20) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த வீட்டில் இரண்டு வயோதிப பெண்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஒருவர் இன்று காலை தேவாலயத்திற்கு சென்றுள்ளார். இருவரும் தேவாலயத்திற்கு சென்றிருப்பார்கள் என்ற எண்ணத்தில் 20 வயதான, அயல்வீட்டு இளைஞன் திருடுவதற்தாக அங்கு சென்றுள்ளார்.இந்நிலையில் குறித்த வயோதிப பெண் அந்த இளைஞனை கண்டவேளை அந்த இளைஞன் கொட்டன் ஒன்றினால் குறித்த பெண்ணை தாக்கி கொலை செய்துள்ளார்.தடயவியல் பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement