• Aug 12 2025

ஓடும் பேருந்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்த பெண்! இறுதியில் நடந்த சோகம்- பதைபதைக்கும் காட்சி!

shanuja / Aug 12th 2025, 10:04 am
image

ஓடும் பேருந்தில் இருந்து தவறுதலாக கீழே விழுந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இந்தத் துயரச் சம்பவம் தமிழகத்தின் கேரளாவில் இடம்பெற்றுள்ளது. 


கேரளா பகுதியிலுள்ள சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து, குறிப்பிட்ட பகுதியிலுள்ள தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டது. 


அந்தத் தரிப்பிடத்திலிருந்து பெண்ணொருவர் பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்தில் உள்ள அனைத்து இருக்கைகளிலும் மக்கள் இருந்துள்ளனர். 


அதனால் குறித்த பெண் பேருந்தில் நின்று பயணம் மேற்கொண்டார். பேருந்தில் ஏறிய பெண் நிற்க முடியாமல் நிலை தடுமாறி  சில நிமிடத்தில் கதவு வழியாக கீழே விழுந்துள்ளார். 


ஓடும் பேருந்திலிருந்து தவறி சாலையில் விழுந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 


பேருந்தில் நின்று கொண்டே பயணித்த பெண் நிலை தடுமாறி, கதவு வழியே சாலையில் விழுந்த காட்சி சிசிரிவியில் வெளிவந்து பதற வைத்துள்ளது. 


அண்மைக்காலமாக பேருந்துகளில் இருந்து தவறுதலாக விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 


இவ்வாறான சூழலில் பேருந்துகளில் பயணம் செய்வோர் பாதுகாப்புடன் பயணிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஓடும் பேருந்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்த பெண் இறுதியில் நடந்த சோகம்- பதைபதைக்கும் காட்சி ஓடும் பேருந்தில் இருந்து தவறுதலாக கீழே விழுந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் தமிழகத்தின் கேரளாவில் இடம்பெற்றுள்ளது. கேரளா பகுதியிலுள்ள சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து, குறிப்பிட்ட பகுதியிலுள்ள தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டது. அந்தத் தரிப்பிடத்திலிருந்து பெண்ணொருவர் பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்தில் உள்ள அனைத்து இருக்கைகளிலும் மக்கள் இருந்துள்ளனர். அதனால் குறித்த பெண் பேருந்தில் நின்று பயணம் மேற்கொண்டார். பேருந்தில் ஏறிய பெண் நிற்க முடியாமல் நிலை தடுமாறி  சில நிமிடத்தில் கதவு வழியாக கீழே விழுந்துள்ளார். ஓடும் பேருந்திலிருந்து தவறி சாலையில் விழுந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பேருந்தில் நின்று கொண்டே பயணித்த பெண் நிலை தடுமாறி, கதவு வழியே சாலையில் விழுந்த காட்சி சிசிரிவியில் வெளிவந்து பதற வைத்துள்ளது. அண்மைக்காலமாக பேருந்துகளில் இருந்து தவறுதலாக விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறான சூழலில் பேருந்துகளில் பயணம் செய்வோர் பாதுகாப்புடன் பயணிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement