• May 03 2024

விடுதலை படம் பார்க்க குழந்தைகளுடன் வந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு- அத்துமீறி உள்ளே சென்றதால் வழக்குப்பதிவு! samugammedia

Tamil nila / Apr 2nd 2023, 7:12 pm
image

Advertisement

ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட விடுதலை திரைப்படத்தை குழந்தைகளுடன் வந்து தியேட்டரில் பார்த்த பெண் மீது போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.



வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வருகிறது. இப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளதால், இதனை 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க முடியும். இந்த நிலையில் விடுதலை படம் பார்க்க குழந்தையுடன் வந்த பெண் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தியேட்டரில் அத்துமீறி நுழைந்த காரணத்தால் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.


சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள திரையரங்கில் வளர்மதி என்கிற சமூக செயற்பாட்டாளர் நேற்று தனது குழந்தைகளுடன் விடுதலை படம் பார்க்க சென்றுள்ளார். இதற்காக டிக்கெட் எடுத்து தியேட்டருக்குள் செல்ல முயன்றபோது, டிக்கெட் பரிசோதகர் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இது ஏ சான்றிதழ் படம் என்பதால் குழந்தைகளுடன் படம் பார்க்க அனுமதிக்கமுடியாது என தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் வாக்குவாதம் செய்த வளர்மது அத்துமீறி தியேட்டரில் நுழைந்ததாக கூறப்படுகிறது.



பின்னர் இதுகுறித்து தியேட்டர் நிர்வாகம் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அவர் போலீஸில் பேச்சுக்கு செவி சாய்க்காமல் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அரைகுறை ஆடையுடன் பெண்களை ஆட வைக்கும் படங்களை குடும்பத்துடன் பார்க்கும்போது, மக்களின் வலியை பேசும் படத்தை ஏன் குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் பார்க்கக்கூடாது என கேள்வி எழுப்பினார்.


எங்கள் குழந்தைகளுக்கு எதைக் காட்டவேண்டும், எதைக் காட்டக்கூடாது என்பதை நாங்கள் முடிவு செய்துகொள்வோம் என வளர்மதி பேசியதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் கைதட்டி அவருக்கு ஆதரவு அளித்தனர். இதையடுத்து அங்கிருந்து கிளம்பிய போலீசார், ஏ சான்றிதழ் படத்திற்கு குழந்தைகளை கூட்டி வந்ததற்காகவும், பொது இடத்தில் இடையூறு ஏற்படுத்தியது மற்றும் அத்துமீறி உள்ளே நுழைந்தது ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

விடுதலை படம் பார்க்க குழந்தைகளுடன் வந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு- அத்துமீறி உள்ளே சென்றதால் வழக்குப்பதிவு samugammedia ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட விடுதலை திரைப்படத்தை குழந்தைகளுடன் வந்து தியேட்டரில் பார்த்த பெண் மீது போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வருகிறது. இப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளதால், இதனை 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க முடியும். இந்த நிலையில் விடுதலை படம் பார்க்க குழந்தையுடன் வந்த பெண் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தியேட்டரில் அத்துமீறி நுழைந்த காரணத்தால் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள திரையரங்கில் வளர்மதி என்கிற சமூக செயற்பாட்டாளர் நேற்று தனது குழந்தைகளுடன் விடுதலை படம் பார்க்க சென்றுள்ளார். இதற்காக டிக்கெட் எடுத்து தியேட்டருக்குள் செல்ல முயன்றபோது, டிக்கெட் பரிசோதகர் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இது ஏ சான்றிதழ் படம் என்பதால் குழந்தைகளுடன் படம் பார்க்க அனுமதிக்கமுடியாது என தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் வாக்குவாதம் செய்த வளர்மது அத்துமீறி தியேட்டரில் நுழைந்ததாக கூறப்படுகிறது.பின்னர் இதுகுறித்து தியேட்டர் நிர்வாகம் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அவர் போலீஸில் பேச்சுக்கு செவி சாய்க்காமல் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அரைகுறை ஆடையுடன் பெண்களை ஆட வைக்கும் படங்களை குடும்பத்துடன் பார்க்கும்போது, மக்களின் வலியை பேசும் படத்தை ஏன் குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் பார்க்கக்கூடாது என கேள்வி எழுப்பினார்.எங்கள் குழந்தைகளுக்கு எதைக் காட்டவேண்டும், எதைக் காட்டக்கூடாது என்பதை நாங்கள் முடிவு செய்துகொள்வோம் என வளர்மதி பேசியதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் கைதட்டி அவருக்கு ஆதரவு அளித்தனர். இதையடுத்து அங்கிருந்து கிளம்பிய போலீசார், ஏ சான்றிதழ் படத்திற்கு குழந்தைகளை கூட்டி வந்ததற்காகவும், பொது இடத்தில் இடையூறு ஏற்படுத்தியது மற்றும் அத்துமீறி உள்ளே நுழைந்தது ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement

Advertisement

Advertisement