மாரடைப்பால் உயிரிழந்ததை பெண் 24 நிமிடங்களுக்கு பின்னர் எழுந்து அமர்ந்த சம்பவம் மருத்துவ அறிவியல் துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் மருத்துவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் பெண் ஒருவர் சுயநினைவில் இல்லாத 24 நிமிடங்களில் எப்படியான உணர்வை அனுபவித்தார் என்பதை Lauren Canaday என்ற அந்த பெண் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
''கடந்த பெப்ரவரி மாதம் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. எனது கணவர் உடனடியாக எனக்கு CPR கொடுத்தார். ஆனால் எந்த அசைவும் ஏற்படவில்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
மேலும், பரிசோதனை நடத்திய பின்னர் நான் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சரியாக 24 நிமிடங்களுக்கு பின்னர் எனது இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. ஆனால் விரைவில் நான் கோமா நிலைக்கு சென்றேன்.
இரண்டு நாட்களாகியும் சுயநினைவு வரவில்லை. மூளைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பின்பு இயல்பு நிலைக்கு திரும்பினேன். மருத்துவக் குழுவினர் என்னை 9 நாட்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்து பரிசோதித்தனர்.
மரணத்தின் விளிம்புக்குச் சென்றேன். இப்போது எனக்கு மரண பயம் இல்லை.எனக்கு மாரடைப்பு வந்தபோது என் கணவர் சரியான நேரத்தில் CPR கொடுத்து எனது உயிரைக் காப்பாற்றினார். அவர் எப்போதும் என் ஹீரோவாக இருப்பார்” எனக் கூறியுள்ளார்.
மேலும் Lauren Canadayயின் நிலை மருத்துவ அறிவியலில் லாசரஸ் விளைவு என அழைக்கப்படுகிறது, அதாவது இறந்தவர்கள் மீண்டும் உயிர் பெறுவது அரிது.
இதே போன்ற நிகழ்வுகளில், உயிர் பிழைத்தவர்கள் நீண்ட காலம் வாழ மாட்டார்கள் என நியூயோர்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.
அத்துடன் Lauren Canaday இந்த சம்பவம் ஆச்சரியமாக இருந்தது. முன்னதாக, 1982 மற்றும் 2018 க்கு இடையில் இது போன்ற 65 சம்பவங்கள் பதிவாகியுள்ளன, அதில் 18 பேர் மட்டுமே முழுமையாக குணமடைந்துள்ளனர் என நியூயோர்க் போஸ்ட் கூறியுள்ளது.
இறந்து 24 நிமிடத்திற்கு பின் உயிர்பிழைத்த பெண் - மருத்துவர்கள் அதிர்ச்சி. Samugammedia மாரடைப்பால் உயிரிழந்ததை பெண் 24 நிமிடங்களுக்கு பின்னர் எழுந்து அமர்ந்த சம்பவம் மருத்துவ அறிவியல் துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சம்பவம் தொடர்பில் மருத்துவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்காவில் பெண் ஒருவர் சுயநினைவில் இல்லாத 24 நிமிடங்களில் எப்படியான உணர்வை அனுபவித்தார் என்பதை Lauren Canaday என்ற அந்த பெண் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.''கடந்த பெப்ரவரி மாதம் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. எனது கணவர் உடனடியாக எனக்கு CPR கொடுத்தார். ஆனால் எந்த அசைவும் ஏற்படவில்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மேலும், பரிசோதனை நடத்திய பின்னர் நான் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.சரியாக 24 நிமிடங்களுக்கு பின்னர் எனது இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. ஆனால் விரைவில் நான் கோமா நிலைக்கு சென்றேன்.இரண்டு நாட்களாகியும் சுயநினைவு வரவில்லை. மூளைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பின்பு இயல்பு நிலைக்கு திரும்பினேன். மருத்துவக் குழுவினர் என்னை 9 நாட்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்து பரிசோதித்தனர்.மரணத்தின் விளிம்புக்குச் சென்றேன். இப்போது எனக்கு மரண பயம் இல்லை.எனக்கு மாரடைப்பு வந்தபோது என் கணவர் சரியான நேரத்தில் CPR கொடுத்து எனது உயிரைக் காப்பாற்றினார். அவர் எப்போதும் என் ஹீரோவாக இருப்பார்” எனக் கூறியுள்ளார்.மேலும் Lauren Canadayயின் நிலை மருத்துவ அறிவியலில் லாசரஸ் விளைவு என அழைக்கப்படுகிறது, அதாவது இறந்தவர்கள் மீண்டும் உயிர் பெறுவது அரிது.இதே போன்ற நிகழ்வுகளில், உயிர் பிழைத்தவர்கள் நீண்ட காலம் வாழ மாட்டார்கள் என நியூயோர்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.அத்துடன் Lauren Canaday இந்த சம்பவம் ஆச்சரியமாக இருந்தது. முன்னதாக, 1982 மற்றும் 2018 க்கு இடையில் இது போன்ற 65 சம்பவங்கள் பதிவாகியுள்ளன, அதில் 18 பேர் மட்டுமே முழுமையாக குணமடைந்துள்ளனர் என நியூயோர்க் போஸ்ட் கூறியுள்ளது.