மாத்தறை - வெலிகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (06) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 78 வயதுடைய பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண் தங்கியிருந்த வீட்டுக்குள் இனந்தெரியாத சந்தேக நபர்கள் சிலர் புகுந்து வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர், வீட்டில் வைத்து பெண்ணின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண் அவருடைய சகோதரி மற்றும் கணவருடன் வசித்து வருவதுடன், இருவரும் வெளியில் சென்ற போதே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தறை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் நடந்தது என்ன. மாத்தறை - வெலிகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (06) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 78 வயதுடைய பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண் தங்கியிருந்த வீட்டுக்குள் இனந்தெரியாத சந்தேக நபர்கள் சிலர் புகுந்து வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.பின்னர், வீட்டில் வைத்து பெண்ணின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண் அவருடைய சகோதரி மற்றும் கணவருடன் வசித்து வருவதுடன், இருவரும் வெளியில் சென்ற போதே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தறை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.