• Jan 19 2025

மட்டு. வாவியில் பெண்ணின் சடலம் மீட்பு - சடலத்தை அடையாளம்காண உதவுமாறு பொலிசார் கோரிக்கை

Tharmini / Jan 18th 2025, 2:06 pm
image

மட்டக்களப்பு  நகர் வாவியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று (18) அடையாளம் காணப்படாத நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு. தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

கல்லடி பாலத்துக்கு அருகாமையிலுள்ள முனிச் விக்டோரியா நட்புறவு வீதியிலுள்ள வாவிக்கரையில் நீரில் மூழ்கிய நிலையில் சடலம் ஒன்று கரையடைந்த நிலையில் இருப்பதை கண்டு பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையினை முன்னெடுத்துவருவதுடன் சடலம் அடையாளம் காணப்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



மட்டு. வாவியில் பெண்ணின் சடலம் மீட்பு - சடலத்தை அடையாளம்காண உதவுமாறு பொலிசார் கோரிக்கை மட்டக்களப்பு  நகர் வாவியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று (18) அடையாளம் காணப்படாத நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு. தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.கல்லடி பாலத்துக்கு அருகாமையிலுள்ள முனிச் விக்டோரியா நட்புறவு வீதியிலுள்ள வாவிக்கரையில் நீரில் மூழ்கிய நிலையில் சடலம் ஒன்று கரையடைந்த நிலையில் இருப்பதை கண்டு பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையினை முன்னெடுத்துவருவதுடன் சடலம் அடையாளம் காணப்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement