• Sep 21 2024

பெண்கள் இரவிலும் பயமின்றி உலா வரலாம்...புதிய திட்டம் அறிமுகம்...! samugammedia

Tamil nila / Jun 21st 2023, 5:05 pm
image

Advertisement

தமிழகத்தில் பெண்கள் இரவு வேளைகளில் பயமின்றி பாதுகாப்பாக வெளியே சென்று வரக்கூடிய  வகையிலான  புதிய திட்டம்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர். 

அந்த வகையில் இரவு பத்து மணி முதல் காலை ஆறு மணி வரை பெண்களை எந்த இடத்திற்கும்  பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கு  சுற்றுக்காவல் வாகனங்கள் பயன்படுத்தப்படும் என்று  காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இந்த பாதுகாப்பு திட்டத்திற்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

அந்த வகையில் இந்த  தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டால்  பெண்கள் இருக்கும் இடத்திற்கே சுற்றுக்காவல் வாகனம் வந்து அழைத்துச் செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

அத்துடன், அனைத்து நாட்களிலும் இந்தச் சேவையை இலவசமாக பயன்படுத முடியும் என்றும், தமிழ்நாடு முழுவதும் இந்த பெண்கள் பாதுகாப்பு திட்டம் செயற்படுத்தப்பட உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், பணி நிமித்தமாக அல்லது தனிப்பட்ட காரணங்களிற்காக பெண்கள் இரவு வேளையில்  வெளியே செல்ல வேண்டிய தேவை  ஏற்படும். 

எனினும் அந்த வேளைகளில் வெளியே செல்வதற்கு பயம் எழுந்தால் பெண்கள் தயக்கமின்றி  காவல்துறையை நாடலாம். 

அந்த அடிப்படையில், பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயக்கப்படும் சுற்றுக்காவல் வாகனங்கள் மூலம் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளார்.

பெண்கள் இரவிலும் பயமின்றி உலா வரலாம்.புதிய திட்டம் அறிமுகம். samugammedia தமிழகத்தில் பெண்கள் இரவு வேளைகளில் பயமின்றி பாதுகாப்பாக வெளியே சென்று வரக்கூடிய  வகையிலான  புதிய திட்டம்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இரவு பத்து மணி முதல் காலை ஆறு மணி வரை பெண்களை எந்த இடத்திற்கும்  பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கு  சுற்றுக்காவல் வாகனங்கள் பயன்படுத்தப்படும் என்று  காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு திட்டத்திற்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்த  தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டால்  பெண்கள் இருக்கும் இடத்திற்கே சுற்றுக்காவல் வாகனம் வந்து அழைத்துச் செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து நாட்களிலும் இந்தச் சேவையை இலவசமாக பயன்படுத முடியும் என்றும், தமிழ்நாடு முழுவதும் இந்த பெண்கள் பாதுகாப்பு திட்டம் செயற்படுத்தப்பட உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.மேலும், பணி நிமித்தமாக அல்லது தனிப்பட்ட காரணங்களிற்காக பெண்கள் இரவு வேளையில்  வெளியே செல்ல வேண்டிய தேவை  ஏற்படும். எனினும் அந்த வேளைகளில் வெளியே செல்வதற்கு பயம் எழுந்தால் பெண்கள் தயக்கமின்றி  காவல்துறையை நாடலாம். அந்த அடிப்படையில், பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயக்கப்படும் சுற்றுக்காவல் வாகனங்கள் மூலம் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement