• Sep 22 2024

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும் இன்று பணிப்புறக்கணிப்பு...!samugammedia

Anaath / Nov 1st 2023, 12:32 pm
image

Advertisement

பொது சுகாதாரப் பணியாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை சுகாதாரப் பணியாளர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த சுகாதாரப் பணியாளர்கள்,

9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆள் பற்றாக்குறை, எங்கள் கனிஷ்ட ஊழியர்கள் கடும் சிரமத்தின் மத்தியில் கடமை ஆற்றிக்கொண்டிருக்கிறார்கள். அரசு அதற்கு ஆளணி எடுத்து தருவதாக தெரியவும் இல்லை. எங்களுக்கு கனிஷ்ட ஊழியர்களை எடுத்து தந்தாலும் நல்லது. பிரைவேட் கம்பெனியிலிருந்து ஆட்களை எடுத்து தந்தாலும் நாங்கள் எங்களுடைய வேலையை செய்து கொள்வோம். எங்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கு குறைவாக இருக்கிறது. கடும் கஷ்டத்தின் மத்தியில் நாங்கள் கடமை ஆற்றிக்கொண்டிருக்கின்ற  பொழுது மேலதிக கொடுப்பனவு வாழ்வாதாரத்துக்கு எங்களுக்கு 20000 ரூபா கொடுக்க வேண்டும் என்று கேட்டு இருக்கின்றோம். அதற்கு எங்களினுடைய யூனியன் தலைவர் கதைத்த பொழுது தோல்வி முடிந்த நிலையில் தான் நாங்கள் இந்த அடையாள வேலை நிறுத்தத்தை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். எங்களினுடைய எரிபொருள் மற்றும் மினக்கட்டணம் அதிகரித்திருக்கிறது. சம்பளம் அப்படியே தான்  இருக்கின்றது.  அதுக்குள்ளே நாங்கள் கடும் சிரமத்தின் மத்தியிலே நாங்கள் வாழ்க்கையை கொண்டு நடத்திக்கொண்டு இருக்கின்றோம். இதற்கு ஒரு தீர்க்கமான ஒரு தீர்வினை தருமாறு அரசிடம் கோரி நிற்பதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும் இன்று பணிப்புறக்கணிப்பு.samugammedia பொது சுகாதாரப் பணியாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை சுகாதாரப் பணியாளர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்போது கருத்து தெரிவித்த சுகாதாரப் பணியாளர்கள்,9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆள் பற்றாக்குறை, எங்கள் கனிஷ்ட ஊழியர்கள் கடும் சிரமத்தின் மத்தியில் கடமை ஆற்றிக்கொண்டிருக்கிறார்கள். அரசு அதற்கு ஆளணி எடுத்து தருவதாக தெரியவும் இல்லை. எங்களுக்கு கனிஷ்ட ஊழியர்களை எடுத்து தந்தாலும் நல்லது. பிரைவேட் கம்பெனியிலிருந்து ஆட்களை எடுத்து தந்தாலும் நாங்கள் எங்களுடைய வேலையை செய்து கொள்வோம். எங்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கு குறைவாக இருக்கிறது. கடும் கஷ்டத்தின் மத்தியில் நாங்கள் கடமை ஆற்றிக்கொண்டிருக்கின்ற  பொழுது மேலதிக கொடுப்பனவு வாழ்வாதாரத்துக்கு எங்களுக்கு 20000 ரூபா கொடுக்க வேண்டும் என்று கேட்டு இருக்கின்றோம். அதற்கு எங்களினுடைய யூனியன் தலைவர் கதைத்த பொழுது தோல்வி முடிந்த நிலையில் தான் நாங்கள் இந்த அடையாள வேலை நிறுத்தத்தை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். எங்களினுடைய எரிபொருள் மற்றும் மினக்கட்டணம் அதிகரித்திருக்கிறது. சம்பளம் அப்படியே தான்  இருக்கின்றது.  அதுக்குள்ளே நாங்கள் கடும் சிரமத்தின் மத்தியிலே நாங்கள் வாழ்க்கையை கொண்டு நடத்திக்கொண்டு இருக்கின்றோம். இதற்கு ஒரு தீர்க்கமான ஒரு தீர்வினை தருமாறு அரசிடம் கோரி நிற்பதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement