• Nov 22 2024

நான்கு நாட்களாக குறைக்கப்படும் வேலை நாட்கள்...! நாளை முதல் அமுல்...!samugammedia

Sharmi / Jan 31st 2024, 2:58 pm
image

ஜெர்மனி பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்காக எதிர்வரும் பெப்ரவரி 1 முதல், வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் நடைமுறைக்கு வருகிறது. 

பல தொழிலாளர் சங்கங்கள் இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என வாதிட்டு  வந்த நிலையில் அமுலுக்கு வரவிருக்கும் இந்த சோதனை நடைமுறை, நற்பிரதிபலன்களை அளிக்கும் என தொழிற்சங்கங்களும் அரசும் எதிர்பார்க்கின்றன.

இந்த சோதனையில் ஜெர்மனியின் 45 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 

அத்துடன் இந்த சோதனை அடுத்த ஆறு மாதங்களுக்கு ஜெர்மனியில் மேற்கொள்ளப்படுகிறது.

உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் மூலம் ஜெர்மனியில் நிலவும் குறைந்த பணியாளர்கள் பிரச்னையும் தீர்வுக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகின்றது.

குறித்த இதேவேளை பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், அவுஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் குறைந்த வேலை நேரங்கள் பரவலாக கடைபிடிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

நான்கு நாட்களாக குறைக்கப்படும் வேலை நாட்கள். நாளை முதல் அமுல்.samugammedia ஜெர்மனி பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்காக எதிர்வரும் பெப்ரவரி 1 முதல், வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் நடைமுறைக்கு வருகிறது. பல தொழிலாளர் சங்கங்கள் இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என வாதிட்டு  வந்த நிலையில் அமுலுக்கு வரவிருக்கும் இந்த சோதனை நடைமுறை, நற்பிரதிபலன்களை அளிக்கும் என தொழிற்சங்கங்களும் அரசும் எதிர்பார்க்கின்றன. இந்த சோதனையில் ஜெர்மனியின் 45 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. அத்துடன் இந்த சோதனை அடுத்த ஆறு மாதங்களுக்கு ஜெர்மனியில் மேற்கொள்ளப்படுகிறது. உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் மூலம் ஜெர்மனியில் நிலவும் குறைந்த பணியாளர்கள் பிரச்னையும் தீர்வுக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகின்றது.குறித்த இதேவேளை பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், அவுஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் குறைந்த வேலை நேரங்கள் பரவலாக கடைபிடிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement