• Sep 20 2024

திருகோணமலையில் அஞ்சல் மூல வாக்கு அடையாளமிடும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் அலுவலர்களுக்கான செயலமர்வு!

Tamil nila / Sep 3rd 2024, 10:02 pm
image

Advertisement

2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்கு அடையாளமிடும் நடவடிக்கைகளை மேற்பார்வை  செய்யும் அலுவலர்களுக்கான செயலமர்வு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் இன்று (03) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.


2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான  அஞ்சல் மூல வாக்களிப்பு செப்டெம்பர் 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளைய தினம் (04) மாவட்ட செயலகம், பொலிஸ் , மற்றும் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் கடமையாற்றும் அலுவலர்களுக்கும், (05) ஆம் திகதி ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புப் படையில் கடமையாற்றும் அலுவலர்களுக்கும், (06) ஆம் திகதி ஏனைய அரச நிறுவனங்கள் , பொலிஸ், பாதுகாப்பு படையில் கடமையாற்றும் அலுவலர்களுக்கும் அஞ்சல் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

அஞ்சல் மூல வாக்கு அடையாளமிடும் நடவடிக்கைகளை மேற்பார்வை  செய்யும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள், கடமைகள் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து திருகோணமலை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் மற்றும் அஞ்சல் மூல வாக்கு உதவி தெரிவத்தாட்சி அலுவலர் எஸ்.கே.டி நிரஞ்சன் ஆகியோரால் இதன்போது தெளிவூட்டப்பட்டது.

இவ்செயலமர்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அஞ்சல் மூல வாக்கு அடையாளமிடும் நடவடிக்கைகளை மேற்பார்வை  செய்யும் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



திருகோணமலையில் அஞ்சல் மூல வாக்கு அடையாளமிடும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் அலுவலர்களுக்கான செயலமர்வு 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்கு அடையாளமிடும் நடவடிக்கைகளை மேற்பார்வை  செய்யும் அலுவலர்களுக்கான செயலமர்வு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் இன்று (03) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான  அஞ்சல் மூல வாக்களிப்பு செப்டெம்பர் 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.நாளைய தினம் (04) மாவட்ட செயலகம், பொலிஸ் , மற்றும் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் கடமையாற்றும் அலுவலர்களுக்கும், (05) ஆம் திகதி ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புப் படையில் கடமையாற்றும் அலுவலர்களுக்கும், (06) ஆம் திகதி ஏனைய அரச நிறுவனங்கள் , பொலிஸ், பாதுகாப்பு படையில் கடமையாற்றும் அலுவலர்களுக்கும் அஞ்சல் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது.அஞ்சல் மூல வாக்கு அடையாளமிடும் நடவடிக்கைகளை மேற்பார்வை  செய்யும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள், கடமைகள் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து திருகோணமலை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் மற்றும் அஞ்சல் மூல வாக்கு உதவி தெரிவத்தாட்சி அலுவலர் எஸ்.கே.டி நிரஞ்சன் ஆகியோரால் இதன்போது தெளிவூட்டப்பட்டது.இவ்செயலமர்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அஞ்சல் மூல வாக்கு அடையாளமிடும் நடவடிக்கைகளை மேற்பார்வை  செய்யும் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement