• Nov 17 2024

காணி உரிமை தொடர்பான செயலமர்வு : அகம் மனிதாபிமான வள நிலைய ஏற்பாட்டில்

Tharmini / Nov 17th 2024, 11:41 am
image

நில மீட்புக்கான செயற்றிட்டத்தின்கீழ் கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு,

நில உரிமை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு திருகோணமலை சர்வோதயம் கேட்போர் கூடத்தில் இன்று (17) இடம்பெற்றது.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்கள் அனுபவித்து வரும் காணிப் பிணக்கு தொடர்பான தெளிவு,

காணி பிணக்குக்கு தீர்வை பெறக் கூடிய வழிமுறைகள்,

காணி உரிமை தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இதனை அகம் மனிதாபிமான வள நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.

செயலமர்வில் திருகோணமலை மாவட்டத்தில் அதிக காணி பிணக்குகள் உள்ள மூதூர், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த காணி உரிமைகளை இழந்தோர்,

இளைஞர்கள், சிவில் அமைப்பினர்கள் கலந்து கொண்டு தெளிவுகளை பெற்றுக் கொண்டனர்.

இப் பயிற்சிநெறியில் அகம் மனிதாபிமான வள நிலையத்தின் பிரதி இணைப்பாளர் அ.மதன் ,சட்டத்தரணிகள், அகம் மனிதாபிமான வள நிலையத்தின் உதவிக் கணக்காளர் கு.சஞ்சலிதா, கள இணைப்பாளர் சி.லீனா ஆகியோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





காணி உரிமை தொடர்பான செயலமர்வு : அகம் மனிதாபிமான வள நிலைய ஏற்பாட்டில் நில மீட்புக்கான செயற்றிட்டத்தின்கீழ் கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு, நில உரிமை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு திருகோணமலை சர்வோதயம் கேட்போர் கூடத்தில் இன்று (17) இடம்பெற்றது.இதன்போது கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்கள் அனுபவித்து வரும் காணிப் பிணக்கு தொடர்பான தெளிவு, காணி பிணக்குக்கு தீர்வை பெறக் கூடிய வழிமுறைகள், காணி உரிமை தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன.இதனை அகம் மனிதாபிமான வள நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.செயலமர்வில் திருகோணமலை மாவட்டத்தில் அதிக காணி பிணக்குகள் உள்ள மூதூர், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த காணி உரிமைகளை இழந்தோர், இளைஞர்கள், சிவில் அமைப்பினர்கள் கலந்து கொண்டு தெளிவுகளை பெற்றுக் கொண்டனர்.இப் பயிற்சிநெறியில் அகம் மனிதாபிமான வள நிலையத்தின் பிரதி இணைப்பாளர் அ.மதன் ,சட்டத்தரணிகள், அகம் மனிதாபிமான வள நிலையத்தின் உதவிக் கணக்காளர் கு.சஞ்சலிதா, கள இணைப்பாளர் சி.லீனா ஆகியோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement