• Nov 24 2024

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரிப்பு - உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!

Tamil nila / Jul 12th 2024, 8:47 pm
image

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் தீவிரம் குறைவடைந்துள்ள போதிலும், உலகளாவிய ரீதியில் தொடர்ந்தும் அச்சுறுத்தலாக உள்ளது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் Tedros Adhanom Ghebreyesus இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக உலகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் சுமார் 1700 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இந்த நிலையானது ஆபத்தில் உள்ள மக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்வதனை வலியுறுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்  60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இறுதியாக தடுப்பூசியைப் பெற்று 12 மாதங்களுக்குள் மீண்டும் தடுப்பூசியை பெற வேண்டுமெனவும் உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரிப்பு - உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் தீவிரம் குறைவடைந்துள்ள போதிலும், உலகளாவிய ரீதியில் தொடர்ந்தும் அச்சுறுத்தலாக உள்ளது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.ஜெனிவாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் Tedros Adhanom Ghebreyesus இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.எவ்வாறெனில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக உலகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் சுமார் 1700 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.குறித்த இந்த நிலையானது ஆபத்தில் உள்ள மக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்வதனை வலியுறுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும்  60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இறுதியாக தடுப்பூசியைப் பெற்று 12 மாதங்களுக்குள் மீண்டும் தடுப்பூசியை பெற வேண்டுமெனவும் உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement