உலக தங்கச் சந்தையை அதிர்ச்சியடையச் செய்யும் வகையில், சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள பிங்ஜியாங் மாவட்டத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 1,000 மெட்ரிக் டன் தங்கம், இந்திய மதிப்பில் 7.3 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் நிலத்தடி பகுதியில் இருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இதன் மூலம், இதுவரை உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்கமாக கருதப்பட்ட தென் ஆப்பிரிக்காவின் South Deep Gold Mine சாதனையை சீனா முறியடித்துள்ளது.
3D புவியியல் தொழில்நுட்பம் மூலம் அடையாளம் காணப்பட்ட இந்த சுரங்கத்தில் 40 வகையான தங்கத் தாதுக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் ஹூனான் மாகாணம் தற்போது உலக தங்க உற்பத்தியில் முக்கிய மையமாக உருவாகப்போகிறது என பொருளாதார வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
இதனால், உலக தங்க சந்தையில் விலை சரிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இந்த கண்டுபிடிப்பு சீன பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஆதாயம் அளிக்கும்.
சீனா ஏற்கனவே உலகின் இரண்டாவது மிகப்பெரிய தங்க உற்பத்தியாளர் நாடாக உள்ளது.
புதிய தங்கச் சுரங்கம் வணிக ரீதியாகச் செயல்படத் தொடங்கினால், சீனாவின் தங்க ஏற்றுமதி, நாணய மதிப்பு, மற்றும் உலகளாவிய பொருளாதார தாக்கம் மிகவும் உயரும் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சீன புவியியல் துறை அதிகாரிகள், இது ஆரம்ப கட்டம் மட்டுமே, விரைவில் முழுமையான சுரங்கப் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
உலகின் பெரிய தங்க சுரங்கம் கண்டுப்பிடிப்பு எவ்வளவு தங்கம் உள்ளது தெரியுமா உலக தங்கச் சந்தையை அதிர்ச்சியடையச் செய்யும் வகையில், சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள பிங்ஜியாங் மாவட்டத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சுமார் 1,000 மெட்ரிக் டன் தங்கம், இந்திய மதிப்பில் 7.3 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் நிலத்தடி பகுதியில் இருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.இதன் மூலம், இதுவரை உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்கமாக கருதப்பட்ட தென் ஆப்பிரிக்காவின் South Deep Gold Mine சாதனையை சீனா முறியடித்துள்ளது.3D புவியியல் தொழில்நுட்பம் மூலம் அடையாளம் காணப்பட்ட இந்த சுரங்கத்தில் 40 வகையான தங்கத் தாதுக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் ஹூனான் மாகாணம் தற்போது உலக தங்க உற்பத்தியில் முக்கிய மையமாக உருவாகப்போகிறது என பொருளாதார வல்லுநர்கள் கணிக்கின்றனர்.இதனால், உலக தங்க சந்தையில் விலை சரிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.இந்த கண்டுபிடிப்பு சீன பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஆதாயம் அளிக்கும்.சீனா ஏற்கனவே உலகின் இரண்டாவது மிகப்பெரிய தங்க உற்பத்தியாளர் நாடாக உள்ளது.புதிய தங்கச் சுரங்கம் வணிக ரீதியாகச் செயல்படத் தொடங்கினால், சீனாவின் தங்க ஏற்றுமதி, நாணய மதிப்பு, மற்றும் உலகளாவிய பொருளாதார தாக்கம் மிகவும் உயரும் என குறிப்பிட்டுள்ளனர்.மேலும், சீன புவியியல் துறை அதிகாரிகள், இது ஆரம்ப கட்டம் மட்டுமே, விரைவில் முழுமையான சுரங்கப் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.