• Jan 19 2026

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எக்ஸ் தளம் திடீர் முடக்கம்

Aathira / Jan 17th 2026, 12:08 pm
image

உலகம் முழுவதும் எக்ஸ் தளம் மற்றும் அதன் ஏஐ கருவியான குரோக் சேவைகள் திடீரென முடங்கியது. 

நேற்று இரவு 8.30 மணிக்கு முடங்கிய சேவை மீண்டும் இரவு 10 மணிக்கு பிறகு மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

இதைப் பதிவிட்ட டவுன்டெக்டர் இணையதளத்தின் படி, அமெரிக்காவில் மட்டும் சுமார் 75,000 பேர் புகார் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில், டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான பயனர்கள் கணக்குகளை அணுக முடியாமல் சிரமப்பட்டனர். 

குறிப்பாக, எக்ஸ் தளத்தில் பதிவுகள் மற்றும் பின்னூட்டங்கள் சரியாக செயல்படவில்லை. 

மேலும் பிரீமியம் பயனர்களுக்கான குரோக் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த வாரம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நடந்த சிறிய முடக்கத்தைத் தொடர்ந்து, இது நான்கு நாட்களில் இரண்டாவது பெரிய தொழில்நுட்பக் கோளாறாக பார்க்கப்படுகிறது. 

எனினும் இது தொடர்பில் எக்ஸ் நிறுவனம் அல்லது எலான் மஸ்க் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ விளக்கமும் கொடுக்கப்படவில்லை.

ஆனலும், எக்ஸ் தள சேவைகள் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளன.

இந்த தொடர்ச்சியான முடக்கங்கள் மற்றும் குரோக் ஏஐ தொடர்பான புகார்கள், எக்ஸ் தளத்தின் நம்பகத்தன்மையைப் பயனர்களிடையே கேள்விக்குறியாக்கியுள்ளதாக தெரிய வருகிறது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எக்ஸ் தளம் திடீர் முடக்கம் உலகம் முழுவதும் எக்ஸ் தளம் மற்றும் அதன் ஏஐ கருவியான குரோக் சேவைகள் திடீரென முடங்கியது. நேற்று இரவு 8.30 மணிக்கு முடங்கிய சேவை மீண்டும் இரவு 10 மணிக்கு பிறகு மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.இதைப் பதிவிட்ட டவுன்டெக்டர் இணையதளத்தின் படி, அமெரிக்காவில் மட்டும் சுமார் 75,000 பேர் புகார் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.இந்தியாவில், டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான பயனர்கள் கணக்குகளை அணுக முடியாமல் சிரமப்பட்டனர். குறிப்பாக, எக்ஸ் தளத்தில் பதிவுகள் மற்றும் பின்னூட்டங்கள் சரியாக செயல்படவில்லை. மேலும் பிரீமியம் பயனர்களுக்கான குரோக் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.இந்த வாரம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நடந்த சிறிய முடக்கத்தைத் தொடர்ந்து, இது நான்கு நாட்களில் இரண்டாவது பெரிய தொழில்நுட்பக் கோளாறாக பார்க்கப்படுகிறது. எனினும் இது தொடர்பில் எக்ஸ் நிறுவனம் அல்லது எலான் மஸ்க் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ விளக்கமும் கொடுக்கப்படவில்லை.ஆனலும், எக்ஸ் தள சேவைகள் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளன.இந்த தொடர்ச்சியான முடக்கங்கள் மற்றும் குரோக் ஏஐ தொடர்பான புகார்கள், எக்ஸ் தளத்தின் நம்பகத்தன்மையைப் பயனர்களிடையே கேள்விக்குறியாக்கியுள்ளதாக தெரிய வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement