பள்ளிப்பருவம் முதல் கண் பார்வை இழந்த சிறீதரன் யோகதாஸ் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தின் நேற்றைய பட்டமளிப்பு விழாவில் அவர் பட்டம் பெற்றுள்ளார்.
அதாவது வவுனியா புமாங்குளம் பகுதியை சேர்ந்த சிறீதரன் யோகதாஸ் இரண்டு வயதாகும் போது ஒரு வித தோல் நோயால் பாதிக்கப்படடர்.அந்த சவால்களுடன் ஆரம்ப கல்வியை வவுனியா விபுலானந்தா கல்லூரியில் கற்றார்.நோய் தாக்கத்தின் வீரியத்தால் 17 வயதாகும் போது முற்றாக கண் பார்வையை இழந்தார்.
இது குறித்து சிறீதரன் யோகதாஸ் கூறுகையில்,
நான் எனது பார்வை இழப்பிற்கு பின்னர் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் உயர்தரக்கல்வியை தொடர்ந்தேன். 2A ,B சித்திகளை பெற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டேன். எந்த கல்வியாயினும் அதிலே ஒரு விசேடமான புதிய கற்கை நெறியினை கற்க வேண்டும் என்பது எனது ஆசை. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மொழி பெயர்ப்பு கற்கை நெறியை எனது பட்டப்படிப்பிற்காக தெரிவு செய்தேன். இக்கற்கையினை தெரிவு செய்து சிறப்பாக கல்வி கற்று படப்பிடிப்பினை நிறைவு செய்துளேன்.
சவால்கள் என்பது மனிதனுக்கு பொதுவானவையே ஆனால் விழிப்புல வலுவிழந்த எம்மை பொறுத்த வரை சவால்களும் எமக்கு புதிதல்ல.அந்த வகையில் எனது கல்விக்கு தொழில்நுட்ப சாதனங்கள் துணை புரிந்தது எனத் தெரிவித்தார்.
இச்சாதனை புரிந்த சிறீதரன் யோகதாஸை அனைவரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கண்பார்வை இல்லாவிட்டாலும் பட்டம் பெற்று சாதனை படைத்த யோகதாஸ். குவியும் வாழ்த்துக்கள். பள்ளிப்பருவம் முதல் கண் பார்வை இழந்த சிறீதரன் யோகதாஸ் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.யாழ் பல்கலைக்கழகத்தின் நேற்றைய பட்டமளிப்பு விழாவில் அவர் பட்டம் பெற்றுள்ளார். அதாவது வவுனியா புமாங்குளம் பகுதியை சேர்ந்த சிறீதரன் யோகதாஸ் இரண்டு வயதாகும் போது ஒரு வித தோல் நோயால் பாதிக்கப்படடர்.அந்த சவால்களுடன் ஆரம்ப கல்வியை வவுனியா விபுலானந்தா கல்லூரியில் கற்றார்.நோய் தாக்கத்தின் வீரியத்தால் 17 வயதாகும் போது முற்றாக கண் பார்வையை இழந்தார்.இது குறித்து சிறீதரன் யோகதாஸ் கூறுகையில், நான் எனது பார்வை இழப்பிற்கு பின்னர் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் உயர்தரக்கல்வியை தொடர்ந்தேன். 2A ,B சித்திகளை பெற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டேன். எந்த கல்வியாயினும் அதிலே ஒரு விசேடமான புதிய கற்கை நெறியினை கற்க வேண்டும் என்பது எனது ஆசை. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மொழி பெயர்ப்பு கற்கை நெறியை எனது பட்டப்படிப்பிற்காக தெரிவு செய்தேன். இக்கற்கையினை தெரிவு செய்து சிறப்பாக கல்வி கற்று படப்பிடிப்பினை நிறைவு செய்துளேன்.சவால்கள் என்பது மனிதனுக்கு பொதுவானவையே ஆனால் விழிப்புல வலுவிழந்த எம்மை பொறுத்த வரை சவால்களும் எமக்கு புதிதல்ல.அந்த வகையில் எனது கல்விக்கு தொழில்நுட்ப சாதனங்கள் துணை புரிந்தது எனத் தெரிவித்தார்.இச்சாதனை புரிந்த சிறீதரன் யோகதாஸை அனைவரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.