எதிர்வரும் வரவு செலவு திட்டத்தின் போது எதிராக வாக்களிக்க நேரிடும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்களை அழுத்தங்களுக்கு உள்ளாக்கும் வகையிலான வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகித்த அபேகுனவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு தேவையானவாறு தீர்மானங்கள் எடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டால் இந்த வரவு செலவு திட்டம் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் எனவும், நாங்கள் சொல்வது கேட்காவிட்டால் நாங்கள் ஏன் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாங்கள் கட்சி என்ற வகையில் ஸ்திரமான தீர்மானத்தில் நிற்போம் என ரோகித அபேகுனவர்தன தெரிவித்துள்ளார்.
வரவு செலவு திட்டத்தின் போது எதிராக வாக்களிக்க நேரிடும். அரசுக்கு மொட்டு எம்.பி எச்சரிக்கை samugammedia எதிர்வரும் வரவு செலவு திட்டத்தின் போது எதிராக வாக்களிக்க நேரிடும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது.மக்களை அழுத்தங்களுக்கு உள்ளாக்கும் வகையிலான வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகித்த அபேகுனவர்தன தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.அரசாங்கத்திற்கு தேவையானவாறு தீர்மானங்கள் எடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டால் இந்த வரவு செலவு திட்டம் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் எனவும், நாங்கள் சொல்வது கேட்காவிட்டால் நாங்கள் ஏன் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.நாங்கள் கட்சி என்ற வகையில் ஸ்திரமான தீர்மானத்தில் நிற்போம் என ரோகித அபேகுனவர்தன தெரிவித்துள்ளார்.