• Nov 28 2024

தேராவில் பகுதியில் போதைப்பொருளுடன் இளம் குடும்பஸ்தர் கைது

Chithra / Oct 6th 2024, 3:19 pm
image


தேராவில் பகுதியில் ஐஸ் போதை பொருளை தம்வசம் வைத்திருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரை நேற்றையதினம் கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று  மாலை இடம்பெற்ற குறித்த கைது சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில்  தேக்கங்காடு பகுதியில்  சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் சார்ஜன் குணவர்த்தனவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்ட  பொலிஸ் குழுவினர் இந்த  கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றையதினம் (06) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நீதிமன்ற நடவடிக்கையின் பின்னர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.சந்திரசேனரின் கீழ் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையிலான பொலிஸார்  விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த குடும்பஸ்தரிடம் இருந்து 3 கிராம் 10 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 430 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடனும் தேராவில் பகுதியினை சேர்ந்த 38 வயதுடைய குடும்பஸ்தரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.


தேராவில் பகுதியில் போதைப்பொருளுடன் இளம் குடும்பஸ்தர் கைது தேராவில் பகுதியில் ஐஸ் போதை பொருளை தம்வசம் வைத்திருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரை நேற்றையதினம் கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று  மாலை இடம்பெற்ற குறித்த கைது சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில்  தேக்கங்காடு பகுதியில்  சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் சார்ஜன் குணவர்த்தனவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்ட  பொலிஸ் குழுவினர் இந்த  கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றையதினம் (06) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நீதிமன்ற நடவடிக்கையின் பின்னர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.சந்திரசேனரின் கீழ் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையிலான பொலிஸார்  விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.குறித்த குடும்பஸ்தரிடம் இருந்து 3 கிராம் 10 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 430 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடனும் தேராவில் பகுதியினை சேர்ந்த 38 வயதுடைய குடும்பஸ்தரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement