• Dec 15 2024

காரை நிறுத்தி துப்பாக்கிச் சூடு நடத்திய இனந்தெரியாத நபர்கள்- இளம் குடும்பஸ்தர் மரணம்!

Tamil nila / Dec 15th 2024, 7:43 am
image

கொழும்பு - மீகொட, நாகஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (14) காரில் பயணித்த ஒருவரை இலக்கு வைத்து, அடையாளம் தெரியாத இருவரால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சகோதரரின் வீட்டில் இருந்து மீகொட நாகஹவத்த பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர் ஒருவர் காரை நிறுத்தியதாகவும், மேலும் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நபர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடந்தபோது அவரது ஒன்றரை வயது மகள் மற்றும் அவரது மனைவி காரில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் பத்தரமுல்ல செத்சிரிபாயவில் உள்ள சமுர்த்தி பிரதான காரியாலயத்தில் அலுவலக உதவியாளராக கடமையாற்றி வந்துள்ளார்.

நுகேகொட குற்றப்பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், மீகொட பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரை நிறுத்தி துப்பாக்கிச் சூடு நடத்திய இனந்தெரியாத நபர்கள்- இளம் குடும்பஸ்தர் மரணம் கொழும்பு - மீகொட, நாகஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்றிரவு (14) காரில் பயணித்த ஒருவரை இலக்கு வைத்து, அடையாளம் தெரியாத இருவரால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.சம்பவத்தில் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரின் சகோதரரின் வீட்டில் இருந்து மீகொட நாகஹவத்த பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.இனந்தெரியாத நபர் ஒருவர் காரை நிறுத்தியதாகவும், மேலும் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நபர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.துப்பாக்கிச் சூடு நடந்தபோது அவரது ஒன்றரை வயது மகள் மற்றும் அவரது மனைவி காரில் இருந்ததாக தெரியவந்துள்ளது.உயிரிழந்தவர் பத்தரமுல்ல செத்சிரிபாயவில் உள்ள சமுர்த்தி பிரதான காரியாலயத்தில் அலுவலக உதவியாளராக கடமையாற்றி வந்துள்ளார்.நுகேகொட குற்றப்பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், மீகொட பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement