• Apr 30 2024

ஆடையின்றி வந்த வீடியோ அழைப்பால் பல இலட்சத்தை இழந்த இளைஞன்..! மக்களே அவதானம்! samugammedia

Chithra / Jun 5th 2023, 7:21 pm
image

Advertisement

இண்டர்நெட்டும் ஸ்மார்ட் போனும் பல வகைகளில் நம்முடைய பணிகளை எளிதாக்கியுள்ள அதேசயம் சரியாக கையாளவில்லை என்றால் அதிக ஆபத்துகளையும் நாம் சந்திக்க வேண்டியுள்ளது.

மும்பையில் இளைஞர் ஒருவர் ஒரே ஒரு வீடியோ காலுக்கு ஆறரை லட்சத்தை கொடுத்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. 

மும்பையில் கார்ப்ரேட் கன்சல்டண்டாக வேலை பார்த்து வரும் 39 வயது இளைஞர் ஒருவருக்கு கடந்த மார்ச் 17 ஆம் திகதி தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ் அப் வீடியோ கால் ஒன்று வந்துள்ளது.

அந்த அழைப்பை எடுத்து இளைஞர் பேசியபோது எதிர் முனையில் ஒரு பெண் பேசியுள்ளார். பேசிக் கொண்டு இருக்கும் போதே பெண் திடீரென தனது ஆடைகளை கழற்றி முழு நிர்வாணமாக நின்றுள்ளார்.

இதனால் அதிர்சியடைந்த அந்த இளைஞர் அழைப்பை துண்டித்துள்ளார். அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த இளைஞருக்கு தெரியாத மற்றொரு எண்ணில் இருந்து ஒரு வீடியோ மெசேஜ் வந்துள்ளது.

அந்த வீடியோவில் நிர்வாணமான ஒரு பெண்னுடன் தான் வீடீயோ காலில் பேசுவதைப் போல காட்சி இருந்துள்ளது. 

காணொளியை பார்த்து அதிர்ந்து போன அந்த இளைஞர் தனக்கு வந்த வீடியோவை டெலிட் செய்திருக்கிறார்.

அடுத்த நாள் அந்த இளைஞருக்கு மற்றொரு தெரியாத செல்போன் எண்ணிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அழைப்பை எடுத்தவுடன் எதிர்முனையில் இருந்தவர், தான் டெல்லி காவல்துறை ஆணையர் அலுவலத்தில் இருப்பதாகவும், நிர்வணமான ஒரு பெண்னுடன் அந்த இளைஞர் இருப்பதை போன்ற வீடியோ தன்னிடம் இருப்பதாகவும், அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார்.


அதோடு அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் தான் சொல்லும் நபரிடம் 50ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்றும் இளைஞரை அச்சுறுத்தியுள்ளார்.

காணொளி வெளியானால் மானம் போய்விடும் என அஞ்சிய இளைஞர் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். இப்படியாக மார்ச் 18 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதிக்குள் பல கட்டமாக அந்த இளைஞர் சுமார் ஆறரை லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

மேலும் பணம் கேட்டு மர்ம கும்பல் மிரட்டவும், அதற்கு மேல் பணம் கொடுக்க முடியாமல் தவித்த இளைஞர் இதுகுறித்து மும்பை மாநகரத்திற்குட்பட்ட காசர்வடவாலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இளைஞரின் புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறை அடையாளம் தெரியாத 15 நபர்கள் மீது ஐபிசி 420 உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

எனவே இவ்வாறான அழைப்புக்கள் உங்களுக்கும் வரலாம். இவ்வாறா மோசடிபேர்வழிகளிடம் ஜாக்கிரிதையாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  


ஆடையின்றி வந்த வீடியோ அழைப்பால் பல இலட்சத்தை இழந்த இளைஞன். மக்களே அவதானம் samugammedia இண்டர்நெட்டும் ஸ்மார்ட் போனும் பல வகைகளில் நம்முடைய பணிகளை எளிதாக்கியுள்ள அதேசயம் சரியாக கையாளவில்லை என்றால் அதிக ஆபத்துகளையும் நாம் சந்திக்க வேண்டியுள்ளது.மும்பையில் இளைஞர் ஒருவர் ஒரே ஒரு வீடியோ காலுக்கு ஆறரை லட்சத்தை கொடுத்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. மும்பையில் கார்ப்ரேட் கன்சல்டண்டாக வேலை பார்த்து வரும் 39 வயது இளைஞர் ஒருவருக்கு கடந்த மார்ச் 17 ஆம் திகதி தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ் அப் வீடியோ கால் ஒன்று வந்துள்ளது.அந்த அழைப்பை எடுத்து இளைஞர் பேசியபோது எதிர் முனையில் ஒரு பெண் பேசியுள்ளார். பேசிக் கொண்டு இருக்கும் போதே பெண் திடீரென தனது ஆடைகளை கழற்றி முழு நிர்வாணமாக நின்றுள்ளார்.இதனால் அதிர்சியடைந்த அந்த இளைஞர் அழைப்பை துண்டித்துள்ளார். அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த இளைஞருக்கு தெரியாத மற்றொரு எண்ணில் இருந்து ஒரு வீடியோ மெசேஜ் வந்துள்ளது.அந்த வீடியோவில் நிர்வாணமான ஒரு பெண்னுடன் தான் வீடீயோ காலில் பேசுவதைப் போல காட்சி இருந்துள்ளது. காணொளியை பார்த்து அதிர்ந்து போன அந்த இளைஞர் தனக்கு வந்த வீடியோவை டெலிட் செய்திருக்கிறார்.அடுத்த நாள் அந்த இளைஞருக்கு மற்றொரு தெரியாத செல்போன் எண்ணிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அழைப்பை எடுத்தவுடன் எதிர்முனையில் இருந்தவர், தான் டெல்லி காவல்துறை ஆணையர் அலுவலத்தில் இருப்பதாகவும், நிர்வணமான ஒரு பெண்னுடன் அந்த இளைஞர் இருப்பதை போன்ற வீடியோ தன்னிடம் இருப்பதாகவும், அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார்.அதோடு அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் தான் சொல்லும் நபரிடம் 50ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்றும் இளைஞரை அச்சுறுத்தியுள்ளார்.காணொளி வெளியானால் மானம் போய்விடும் என அஞ்சிய இளைஞர் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். இப்படியாக மார்ச் 18 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதிக்குள் பல கட்டமாக அந்த இளைஞர் சுமார் ஆறரை லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.மேலும் பணம் கேட்டு மர்ம கும்பல் மிரட்டவும், அதற்கு மேல் பணம் கொடுக்க முடியாமல் தவித்த இளைஞர் இதுகுறித்து மும்பை மாநகரத்திற்குட்பட்ட காசர்வடவாலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இளைஞரின் புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறை அடையாளம் தெரியாத 15 நபர்கள் மீது ஐபிசி 420 உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.எனவே இவ்வாறான அழைப்புக்கள் உங்களுக்கும் வரலாம். இவ்வாறா மோசடிபேர்வழிகளிடம் ஜாக்கிரிதையாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement