• Apr 07 2025

வீடுடைத்து நகை திருடிய இளைஞன் கைது - திருடப்பட்ட நகைகளும் மீட்பு!samugammedia

mathuri / Jan 18th 2024, 7:53 pm
image

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் - மல்வம் பகுதியில் வீடுடைத்து நகை திருடிய குற்றச்சாட்டின் பேரில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உடுவில் - மல்வம் பகுதியில் வீடு ஒன்றினை உடைத்து திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைத்தது.

இந்நிலையில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் இன்றையதினம் மல்வம் பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் நல்லூர் மற்றும் மல்வம் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட 5 1/2 பவுண் திருட்டு நகைகள் கைப்பற்றப்பட்டன. குறித்த சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீடுடைத்து நகை திருடிய இளைஞன் கைது - திருடப்பட்ட நகைகளும் மீட்புsamugammedia சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் - மல்வம் பகுதியில் வீடுடைத்து நகை திருடிய குற்றச்சாட்டின் பேரில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உடுவில் - மல்வம் பகுதியில் வீடு ஒன்றினை உடைத்து திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைத்தது.இந்நிலையில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் இன்றையதினம் மல்வம் பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் நல்லூர் மற்றும் மல்வம் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட 5 1/2 பவுண் திருட்டு நகைகள் கைப்பற்றப்பட்டன. குறித்த சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now