• Jan 24 2025

யாழில் பட்டப்பகலில் கூரையை பிரித்து நகை திருட்டு - இளைஞன் பொலிஸாரால் கைது!

Tamil nila / Dec 5th 2024, 10:07 pm
image

வீடு புகுந்து தாலிக்கொடி உட்பட்ட சில தங்க நகைகள் என 9 3/4 பவுண் நகைகள் களவாடப்பட்டிருந்தது.

நேற்றைய தினம் ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் பகுதியில்

வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்தவேளை மதியம் வீட்டின் கூரையை பிரித்து இந்த திருட்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் குறித்த நகையை திருடிய, அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்றையதினம் (05) கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவர் திருடிய நகையும் மீட்கப்பட்டது. அவர் ஏற்கனவே பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் பட்டப்பகலில் கூரையை பிரித்து நகை திருட்டு - இளைஞன் பொலிஸாரால் கைது வீடு புகுந்து தாலிக்கொடி உட்பட்ட சில தங்க நகைகள் என 9 3/4 பவுண் நகைகள் களவாடப்பட்டிருந்தது.நேற்றைய தினம் ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் பகுதியில்வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்தவேளை மதியம் வீட்டின் கூரையை பிரித்து இந்த திருட்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.அதனடிப்படையில் குறித்த நகையை திருடிய, அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்றையதினம் (05) கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவர் திருடிய நகையும் மீட்கப்பட்டது. அவர் ஏற்கனவே பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement