நாட்டில் தற்போது பெறுமதி சேர் வரி(VAT) உள்ளிட்ட அதிகளவான வரிச் சுமையை மக்கள் மீது இந்த அரசாங்கம் திணித்துள்ளது. இதன் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் வாரிசுமையானது மக்கள் மேல் திணிக்கப்படுவதனால் இளைய சமூகம் எதிர்ப்பார்ப்பிழந்துள்ளதாகவும் அதன் காரணமாக இலங்கையை விடவும் அபிவிருத்தி குறைந்த நாடுகள் நோக்கி இளைஞர் யுவதிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் நிகழ்காலமும் எதிர்காலமும் ஆரோக்கியமானதல்ல என்பதையும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்தி அரசாங்கம் செயற்படத் தவறியுள்ளமையையும் புரிந்து கொண்ட புத்திஜீவிகள், தொழில் வல்லுனர்கள் போன்றே இளைஞர் யுவதிகளும் நாட்டை விட்டு பெருவாரியாக வெளியேறிச் செல்லும் நிலையை அவதானிக்க முடிவதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தால் நாட்டை விட்டு தப்பியோடும் இளைஞர்கள் - சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு.samugammedia நாட்டில் தற்போது பெறுமதி சேர் வரி(VAT) உள்ளிட்ட அதிகளவான வரிச் சுமையை மக்கள் மீது இந்த அரசாங்கம் திணித்துள்ளது. இதன் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் வாரிசுமையானது மக்கள் மேல் திணிக்கப்படுவதனால் இளைய சமூகம் எதிர்ப்பார்ப்பிழந்துள்ளதாகவும் அதன் காரணமாக இலங்கையை விடவும் அபிவிருத்தி குறைந்த நாடுகள் நோக்கி இளைஞர் யுவதிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நாட்டின் நிகழ்காலமும் எதிர்காலமும் ஆரோக்கியமானதல்ல என்பதையும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்தி அரசாங்கம் செயற்படத் தவறியுள்ளமையையும் புரிந்து கொண்ட புத்திஜீவிகள், தொழில் வல்லுனர்கள் போன்றே இளைஞர் யுவதிகளும் நாட்டை விட்டு பெருவாரியாக வெளியேறிச் செல்லும் நிலையை அவதானிக்க முடிவதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.