• Apr 29 2026

இளைஞர்கள் விஜய்யை நம்ப வேண்டாம்- முன்னாள் மேனேஜர் காட்டம்!

Ziya / Feb 12th 2026, 3:50 pm
image

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சனையால் வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில், தீர்ப்பு வர தாமதம் ஆகுமோ என கேவிஎன் நிறுவனம் வழக்கை வாபஸ் வாங்கி விட்டனர். 


வாபஸ் பெற்றதோடு மறு தணிக்கைக்கு படத்தை அனுப்பியும் மறு தணிக்கைக்கான அதிகாரிகள் இன்னும் படம் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் விஜய்யின் அரசியல் குறித்த விவாதங்களும் நடந்து வருகிறது. 


இந்நிலையில் விஜய் பற்றி அவரது முன்னாள் மேனேஜர் பி.டி. செல்வக்குமார் அளித்த பேட்டியொன்றில் சில விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளமை பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. 


அதில், விஜய் ஒரு துரோகி, செங்கோட்டையன் ஒரு ஊழல்வாதி. இளைஞர்கள் விஜய்யை நம்பி பணத்தை செலவு செய்ய வேண்டாம். தேர்தலில் தோற்றால் விஜய் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிடுவார் அவருக்கு தோல்வி பிடிக்காது. 


தோற்ற படத்தின் தயாரிப்பாளர் வந்தாலே வீட்டுக்குள் சேர்க்கமாட்டார். நான் இல்லை என சொல்லிவிடுங்கள் என்று கூறிவிட்டு ஒளிந்து நின்று பார்ப்பார். என்று பி.டி. செல்வக்குமார் வெளிப்படையாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 


பல வருடங்களாக விஜய்க்கு மேனேஜராக இருந்தது மட்டுமில்லாமல் புலி படத்தை தயாரிக்கவும் செய்தார் பி.டி. செல்வக்குமார். இப்போது அவர் திமுகவில் இணைந்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர்கள் விஜய்யை நம்ப வேண்டாம்- முன்னாள் மேனேஜர் காட்டம் நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சனையால் வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில், தீர்ப்பு வர தாமதம் ஆகுமோ என கேவிஎன் நிறுவனம் வழக்கை வாபஸ் வாங்கி விட்டனர். வாபஸ் பெற்றதோடு மறு தணிக்கைக்கு படத்தை அனுப்பியும் மறு தணிக்கைக்கான அதிகாரிகள் இன்னும் படம் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் விஜய்யின் அரசியல் குறித்த விவாதங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் விஜய் பற்றி அவரது முன்னாள் மேனேஜர் பி.டி. செல்வக்குமார் அளித்த பேட்டியொன்றில் சில விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளமை பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அதில், விஜய் ஒரு துரோகி, செங்கோட்டையன் ஒரு ஊழல்வாதி. இளைஞர்கள் விஜய்யை நம்பி பணத்தை செலவு செய்ய வேண்டாம். தேர்தலில் தோற்றால் விஜய் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிடுவார் அவருக்கு தோல்வி பிடிக்காது. தோற்ற படத்தின் தயாரிப்பாளர் வந்தாலே வீட்டுக்குள் சேர்க்கமாட்டார். நான் இல்லை என சொல்லிவிடுங்கள் என்று கூறிவிட்டு ஒளிந்து நின்று பார்ப்பார். என்று பி.டி. செல்வக்குமார் வெளிப்படையாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பல வருடங்களாக விஜய்க்கு மேனேஜராக இருந்தது மட்டுமில்லாமல் புலி படத்தை தயாரிக்கவும் செய்தார் பி.டி. செல்வக்குமார். இப்போது அவர் திமுகவில் இணைந்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement