• Feb 27 2025

றம்புக்கனையில் காட்டுக்கு தீ வைத்த இளைஞர்கள் கைது

Tharmini / Feb 26th 2025, 9:20 am
image

றம்புக்கனை பிரதேச வனப் பகுதிக்கு தீ வைத்த குற்றச்சாட்டில், ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடுகண்ணாவ பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 18 தொடக்கம் 19 வயதுகளையுடைய, கடுகண்ணாவ, பிலிமத்தலாவ மற்றும் ஹந்தெஸ்ஸ பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த இளைஞர்கள், கண்டி, அலகல்ல பெருந்தோட்ட வனப்பகுதிக்குள் அமைந்துள்ள றம்புக்கன பிரதேச வனத்தில் தீ வைத்தபோது, பொதுமக்கள் இளைஞர்களை மடக்கிப்பிடித்துள்ளனர். 

இதனையடுத்து, இளைஞர்களை கைதுசெய்த றம்புக்கன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

றம்புக்கனையில் காட்டுக்கு தீ வைத்த இளைஞர்கள் கைது றம்புக்கனை பிரதேச வனப் பகுதிக்கு தீ வைத்த குற்றச்சாட்டில், ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கடுகண்ணாவ பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 18 தொடக்கம் 19 வயதுகளையுடைய, கடுகண்ணாவ, பிலிமத்தலாவ மற்றும் ஹந்தெஸ்ஸ பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இந்த இளைஞர்கள், கண்டி, அலகல்ல பெருந்தோட்ட வனப்பகுதிக்குள் அமைந்துள்ள றம்புக்கன பிரதேச வனத்தில் தீ வைத்தபோது, பொதுமக்கள் இளைஞர்களை மடக்கிப்பிடித்துள்ளனர். இதனையடுத்து, இளைஞர்களை கைதுசெய்த றம்புக்கன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement