• Apr 28 2024

இலங்கையில் உருவாகும் யூடியூப் பிச்சைக்காரர்கள் - பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் SamugamMedia

Chithra / Feb 19th 2023, 1:24 pm
image

Advertisement

பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பணியகத்தின் விசாரணைகளின்படி, கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் சிறு குழந்தைகளுடன் வீதியில் பிச்சை எடுக்கும் பெண்களில் பலர் போதைக்கு அடிமையானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சில பெண்கள் சிறு குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் சம்பவங்களுக்கு சில யூடியூப் சேனல்கள் வழங்கிய விளம்பரம் காரணமாக பிச்சை எடுக்கும் கைகள், அவர்களிடம் மீண்டும் ஆதரவு கோரும் போக்கு உள்ளதாக் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் திருமதி ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


இதன் காரணமாக வீதி சமிஞ்ஞைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தும் சாரதிகளும் மிகவும் சிரமங்களை எதிர்நோக்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யூடியூப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் இதுபோன்ற சம்பவங்களுக்கு சிலர் அளிக்கும் விளம்பரம் காரணமாக, அந்தப் பெண்கள் தொடர்ந்து அதைச் செய்ய ஆதரவைப் பெற்றதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

கடந்த காலங்களில், சிலர் பிச்சை எடுக்கும் பெண்களுக்கு குழந்தைகளுடன் எவ்வாறு உதவுகிறார்கள் என்பதை பதிவு செய்து, அந்த சேனல்களை பிரபலப்படுத்துவதற்காக தங்கள் சேனல்களில் வெளியிட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.


இதன் காரணமாக பெண் பிச்சைக்காரர்களுக்கு அதிக உதவியும் கிடைப்பதால் அவர்கள் அதிகளவில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுகின்றனர் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் திருமதி ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இது தற்போது குழந்தைகள் பாதுகாப்பில் சிக்கலாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார்.

போதைப்பொருளுக்கு அடிமையாகும் பெண்களின் குழந்தைகளில் பெரும்பாலானோர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டவர்களிடம் இருந்து தெரியவந்த தகவலின்படி, பிச்சை எடுக்கும் பெரியவர்களுடன் இருக்கும் சில சிறு குழந்தைகள் கூட மது பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது தெரியவந்தது.

இதன் காரணமாக நாளொன்றுக்கு ஒரு புதிய முகம் வீதியில் பிச்சையெடுக்கப்படுவதாக பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் உருவாகும் யூடியூப் பிச்சைக்காரர்கள் - பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் SamugamMedia பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பணியகத்தின் விசாரணைகளின்படி, கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் சிறு குழந்தைகளுடன் வீதியில் பிச்சை எடுக்கும் பெண்களில் பலர் போதைக்கு அடிமையானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, சில பெண்கள் சிறு குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் சம்பவங்களுக்கு சில யூடியூப் சேனல்கள் வழங்கிய விளம்பரம் காரணமாக பிச்சை எடுக்கும் கைகள், அவர்களிடம் மீண்டும் ஆதரவு கோரும் போக்கு உள்ளதாக் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் திருமதி ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக வீதி சமிஞ்ஞைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தும் சாரதிகளும் மிகவும் சிரமங்களை எதிர்நோக்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.யூடியூப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் இதுபோன்ற சம்பவங்களுக்கு சிலர் அளிக்கும் விளம்பரம் காரணமாக, அந்தப் பெண்கள் தொடர்ந்து அதைச் செய்ய ஆதரவைப் பெற்றதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.கடந்த காலங்களில், சிலர் பிச்சை எடுக்கும் பெண்களுக்கு குழந்தைகளுடன் எவ்வாறு உதவுகிறார்கள் என்பதை பதிவு செய்து, அந்த சேனல்களை பிரபலப்படுத்துவதற்காக தங்கள் சேனல்களில் வெளியிட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.இதன் காரணமாக பெண் பிச்சைக்காரர்களுக்கு அதிக உதவியும் கிடைப்பதால் அவர்கள் அதிகளவில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுகின்றனர் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் திருமதி ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.இது தற்போது குழந்தைகள் பாதுகாப்பில் சிக்கலாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார்.போதைப்பொருளுக்கு அடிமையாகும் பெண்களின் குழந்தைகளில் பெரும்பாலானோர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.மேலும், பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டவர்களிடம் இருந்து தெரியவந்த தகவலின்படி, பிச்சை எடுக்கும் பெரியவர்களுடன் இருக்கும் சில சிறு குழந்தைகள் கூட மது பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது தெரியவந்தது.இதன் காரணமாக நாளொன்றுக்கு ஒரு புதிய முகம் வீதியில் பிச்சையெடுக்கப்படுவதாக பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பணியகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement