• May 19 2024

துருக்கி நிலநடுக்கம்: பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை 90 மணிநேரத்தின் பின் உயிருடன் மீட்பு!

Sharmi / Feb 11th 2023, 10:07 pm
image

Advertisement

துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.


நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியாவுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.


நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.


இதில், பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கட்டிட இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.


இடிபாடுகளுக்குள் சிக்கிய அந்த பச்சிளம் குழந்தை 90 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.


யாஹிஸ் உலஸ் என்ற அந்த பச்சிளம் குழந்தையின் தாயாரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.


நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



துருக்கி நிலநடுக்கம்: பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை 90 மணிநேரத்தின் பின் உயிருடன் மீட்பு துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியாவுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.இதில், பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கட்டிட இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.இடிபாடுகளுக்குள் சிக்கிய அந்த பச்சிளம் குழந்தை 90 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.யாஹிஸ் உலஸ் என்ற அந்த பச்சிளம் குழந்தையின் தாயாரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement