கடந்த ஆண்டு அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி வீடமைப்பு மற்றும் புனர்வாழ்வு,மீள்குடியேற்ற அமைச்சின் நிதி உதவியில், கல்முனை வடக்கு பிரதேச செயலக கிராமங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 28 வீடுகள் 2024ல் அமைப்பதற்காக நிதி உதவி வழங்கப்பட்டிருந்தன.
அத் திட்டத்தில் இன்றைய தினம் (05) கல்முனை, சேனைக்குடியிருப்பு பகுதிகளில் 10 வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன .
இந்நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எஸ். ஸ்ரீ ரங்கன் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே. குமுதராஜ் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 10 இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டிருந்தாலும் வீடுகளை பெற்றுக் கொண்ட பயனாளிகளின் பங்களிப்புடனும் வீடுகள் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கல்முனையில் ஒரேநாளில் 10 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு. கடந்த ஆண்டு அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி வீடமைப்பு மற்றும் புனர்வாழ்வு,மீள்குடியேற்ற அமைச்சின் நிதி உதவியில், கல்முனை வடக்கு பிரதேச செயலக கிராமங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 28 வீடுகள் 2024ல் அமைப்பதற்காக நிதி உதவி வழங்கப்பட்டிருந்தன.அத் திட்டத்தில் இன்றைய தினம் (05) கல்முனை, சேனைக்குடியிருப்பு பகுதிகளில் 10 வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன .இந்நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எஸ். ஸ்ரீ ரங்கன் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே. குமுதராஜ் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 10 இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டிருந்தாலும் வீடுகளை பெற்றுக் கொண்ட பயனாளிகளின் பங்களிப்புடனும் வீடுகள் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.