• Dec 03 2024

பெருந்தொகை போதைப் பொருட்களை வைத்திருந்த 10 பேர் கைது!

Chithra / Nov 21st 2024, 9:04 am
image


மாத்தறை கந்தர பகுதியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை வைத்திருந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

சந்தேகநபர்களிடம் இருந்து 160 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளும் 60 கிலோ ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட குஷ் போதைப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக கொழும்பு மத்திய தபால் நிலையத்திற்கு வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்கு தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 10 கிலோ 274 கிராம் குஷ் போதைப்பொருள் அடங்கிய இரண்டு பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பாதுக்க, ஹோமாகம மற்றும் களுத்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

பெருந்தொகை போதைப் பொருட்களை வைத்திருந்த 10 பேர் கைது மாத்தறை கந்தர பகுதியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை வைத்திருந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மாத்தறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.சந்தேகநபர்களிடம் இருந்து 160 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளும் 60 கிலோ ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை, தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட குஷ் போதைப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக கொழும்பு மத்திய தபால் நிலையத்திற்கு வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அங்கு தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 10 கிலோ 274 கிராம் குஷ் போதைப்பொருள் அடங்கிய இரண்டு பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பாதுக்க, ஹோமாகம மற்றும் களுத்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement