• Nov 23 2024

10 வருட வளர்ப்பு; 'பான்ட்' வாத்தியங்கள் முழங்க நாய்க்கு நடந்த இறுதிச் சடங்கு! யாழில் நெகிழ்ச்சிச் சம்பவம்

Chithra / Sep 15th 2024, 11:33 am
image


மனிதர்களுக்கு இறுதிச் சடங்கினை செய்வது போல வளர்ப்பு நாய்க்கும் இறுதி சடங்கினை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை - மாவடி பகுதியில் இன்றையதினம்  இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

பைசா என்று அழைக்கப்படும் ரொட்வீலர் இன நாயானது கடந்த 20.08.2006 அன்று பிறந்துள்ளது. 

இந்நிலையில் தனது 18 வயதை தாண்டிய பைசா நேற்றையதினம் உயிரிழந்துள்ளது.

இறுதிச் சடங்கினை செய்த உரிமையாளர் கடந்த 10 வருடங்களாக பைசாவினை வளர்த்து வந்துள்ளார். 

கடந்த 10 வருடங்களாக தனக்கு பாதுகாப்பினை வழங்கிய நன்றிக் கடனுக்காக மனிதர்களுக்கு செய்கின்ற இறுதிச் சடங்கு போல பைசாவுக்கும் இன்றையதினம் இறுதிச் சடங்கினை நடாத்தி நெகிழ வைத்துள்ளார்.

'பான்ட்' வாத்தியங்கள் முழங்க, பைசாவின் உடலம் வட்டுக்கோட்டை பகுதி எங்கும் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. 

அதன்பின்னர் பைசாவின் எஜமானின் காணியில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

10 வருட வளர்ப்பு; 'பான்ட்' வாத்தியங்கள் முழங்க நாய்க்கு நடந்த இறுதிச் சடங்கு யாழில் நெகிழ்ச்சிச் சம்பவம் மனிதர்களுக்கு இறுதிச் சடங்கினை செய்வது போல வளர்ப்பு நாய்க்கும் இறுதி சடங்கினை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை - மாவடி பகுதியில் இன்றையதினம்  இடம்பெற்றுள்ளது.சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,பைசா என்று அழைக்கப்படும் ரொட்வீலர் இன நாயானது கடந்த 20.08.2006 அன்று பிறந்துள்ளது. இந்நிலையில் தனது 18 வயதை தாண்டிய பைசா நேற்றையதினம் உயிரிழந்துள்ளது.இறுதிச் சடங்கினை செய்த உரிமையாளர் கடந்த 10 வருடங்களாக பைசாவினை வளர்த்து வந்துள்ளார். கடந்த 10 வருடங்களாக தனக்கு பாதுகாப்பினை வழங்கிய நன்றிக் கடனுக்காக மனிதர்களுக்கு செய்கின்ற இறுதிச் சடங்கு போல பைசாவுக்கும் இன்றையதினம் இறுதிச் சடங்கினை நடாத்தி நெகிழ வைத்துள்ளார்.'பான்ட்' வாத்தியங்கள் முழங்க, பைசாவின் உடலம் வட்டுக்கோட்டை பகுதி எங்கும் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அதன்பின்னர் பைசாவின் எஜமானின் காணியில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement