• May 02 2024

இலங்கையில் கடந்த ஆறு மாத காலத்தில் முகநூல் தொடர்பில் பத்தாயிரம் முறைப்பாடுகள்! samugammedia

Chithra / Jul 12th 2023, 10:59 am
image

Advertisement

கடந்த ஆறு மாத காலப் பகுதியில் முகநூல் தொடர்பில் சுமார் பத்தாயிரம் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. 

இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவின் சிரேஸ்ட தகவல் தொழிநுட்ப பொறியியலாளர் சாருக தமனுபொல இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் அதிக எண்ணிக்கையான 2330 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு, கம்பஹா, அம்பாறை, பொலன்னறுவை, காலி போன்ற பிரதேசங்களில் அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு முறைப்பாடு செய்தவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

போலி முகநூல் கணக்கு பயன்பாடு, முகநூல் கணக்கிற்கு அனுமதியின்றி பிரவேசித்தல், இணைய வழியில் தொழில் வாய்ப்பு வழங்குவதாக கூறி பண மோசடி செய்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த 2022ஆம் ஆண்டில் 14750 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், முகநூல் தொடர்பில் 101 இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் கடந்த ஆறு மாத காலத்தில் முகநூல் தொடர்பில் பத்தாயிரம் முறைப்பாடுகள் samugammedia கடந்த ஆறு மாத காலப் பகுதியில் முகநூல் தொடர்பில் சுமார் பத்தாயிரம் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவின் சிரேஸ்ட தகவல் தொழிநுட்ப பொறியியலாளர் சாருக தமனுபொல இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.கடந்த மே மாதம் அதிக எண்ணிக்கையான 2330 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கொழும்பு, கம்பஹா, அம்பாறை, பொலன்னறுவை, காலி போன்ற பிரதேசங்களில் அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு முறைப்பாடு செய்தவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.போலி முகநூல் கணக்கு பயன்பாடு, முகநூல் கணக்கிற்கு அனுமதியின்றி பிரவேசித்தல், இணைய வழியில் தொழில் வாய்ப்பு வழங்குவதாக கூறி பண மோசடி செய்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.கடந்த 2022ஆம் ஆண்டில் 14750 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், முகநூல் தொடர்பில் 101 இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement