• May 17 2024

யாழில் கடற்படைக்கு காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு - போராட்டக்காரர்களுக்கு குளிர்பானம் வழங்கிய கடற்படையினரால் குழப்பம் samugammedia

Chithra / Jul 12th 2023, 10:52 am
image

Advertisement

யாழ்.மாவட்டத்திற்குட்பட்ட வேலணைப் பிரதேச செயளாளர் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு கிழக்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 29 தனி நபர்களுக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கு அதிகமான காணிகளைச் சுவீகரித்து  வெலுசுமண கடற்படை முகாம் அமைப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தால் இன்று(12) அளவீடு செய்யப்படும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந் நிலையில் காணி அளவீடு மற்றும்  காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்தக் கோரி மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் இணைந்து எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

ஆரம்பம் முதலே போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட கடற்படையினர் போராட்ட நிறைவில்   போராட்டக்காரர்களுக்கு கடற்படையினர் சிற்றுண்டி மற்றும் குளிர்பானங்களை வழங்க முற்பட்ட வேளையில் போராட்டக்காரர்களால் எதிர்ப்புக் கோசங்கள் எழுப்பப்பட்டது.

இப் போராட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், பிரதேச மக்கள் எனப் பலர் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர். 

இதேவேளை தமிழரசுக் கட்சியைப் பிரதிநித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் கயேந்திரன் ஆகியோர் ஒன்றிணைந்து போராட்டத்தில் கலந்துகொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது.


யாழில் கடற்படைக்கு காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு - போராட்டக்காரர்களுக்கு குளிர்பானம் வழங்கிய கடற்படையினரால் குழப்பம் samugammedia யாழ்.மாவட்டத்திற்குட்பட்ட வேலணைப் பிரதேச செயளாளர் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு கிழக்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 29 தனி நபர்களுக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கு அதிகமான காணிகளைச் சுவீகரித்து  வெலுசுமண கடற்படை முகாம் அமைப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தால் இன்று(12) அளவீடு செய்யப்படும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.இந் நிலையில் காணி அளவீடு மற்றும்  காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்தக் கோரி மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் இணைந்து எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.ஆரம்பம் முதலே போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட கடற்படையினர் போராட்ட நிறைவில்   போராட்டக்காரர்களுக்கு கடற்படையினர் சிற்றுண்டி மற்றும் குளிர்பானங்களை வழங்க முற்பட்ட வேளையில் போராட்டக்காரர்களால் எதிர்ப்புக் கோசங்கள் எழுப்பப்பட்டது.இப் போராட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், பிரதேச மக்கள் எனப் பலர் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர். இதேவேளை தமிழரசுக் கட்சியைப் பிரதிநித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் கயேந்திரன் ஆகியோர் ஒன்றிணைந்து போராட்டத்தில் கலந்துகொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement