• May 20 2024

பணிப்புறக்கணிப்பில் குதிக்கவுள்ள தனியார் பஸ் ஊழியர்கள்..! வெளியான அறிவிப்பு..!samugammedia

Sharmi / Jul 12th 2023, 10:49 am
image

Advertisement

தனியார் பஸ்களுக்கு புதிதாக 140 வீதி அனுமதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுத்தால் நாடு தழுவிய ரீதியில் பஸ் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள சுமார் ஆயிரம் பேருந்துகளும் கால அட்டவணையின்றி தினசரி சேவையில் ஈடுபடவில்லை என்று அவர் கூறுகிறார்.

இருந்த போதிலும் புதிய அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவது தற்போது இயங்கும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள பேருந்துகளை ஒருங்கிணைக்கப்பட்ட கால அட்டவணையின்படி இயக்குவதன் மூலம் பயணிகளுக்கு இடையூறு இல்லாத போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்றும் இவ்வாறு 140 புதிய சாலை அனுமதி வழங்குவதில் பல கோடி ரூபாய் பேரம் நடந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பணிப்புறக்கணிப்பில் குதிக்கவுள்ள தனியார் பஸ் ஊழியர்கள். வெளியான அறிவிப்பு.samugammedia தனியார் பஸ்களுக்கு புதிதாக 140 வீதி அனுமதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுத்தால் நாடு தழுவிய ரீதியில் பஸ் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.தற்போதுள்ள சுமார் ஆயிரம் பேருந்துகளும் கால அட்டவணையின்றி தினசரி சேவையில் ஈடுபடவில்லை என்று அவர் கூறுகிறார்.இருந்த போதிலும் புதிய அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவது தற்போது இயங்கும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.தற்போதுள்ள பேருந்துகளை ஒருங்கிணைக்கப்பட்ட கால அட்டவணையின்படி இயக்குவதன் மூலம் பயணிகளுக்கு இடையூறு இல்லாத போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்றும் இவ்வாறு 140 புதிய சாலை அனுமதி வழங்குவதில் பல கோடி ரூபாய் பேரம் நடந்துள்ளதாகவும் தெரிவித்தார்.நாரஹேன்பிட்டியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement