தமிழ்மொழியில் முறைப்பாட்டினை மேற் கொள்ள என 107 அவசர இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டு நாளைய தினத்தில் இருந்து முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் எண்ணக்கருவின் ஆலோசனைக்கு அமைய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ் மற்றும் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அவர்களாலும் அவசர இலக்கம் தமிழ்மொழியில் தொலைபேசி மூலமாக முறைப்பாடுகள் நாளைய தினத்தில் இருந்து நடைமுறைப்படுத்தும் செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழ் மொழி மூலம் முறைப்பாடுகளை மேற்கொள்ள அவசர இலக்கமான 107 எனும் இலக்கம் நாளைய தினத்திலிருந்து நடைமுறைக்கு வருவதுடன் பயிற்சி அளிக்கப்பட்ட தமிழ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு பொதுமக்கள் சந்திப்புக்கு நாளையதினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தால் மக்கள் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.
வன்னி பிரதி பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் இருக்கும் போது 2016 ஆம் ஆண்டு தமிழ்மொழியில் முறைப்பாட்டினை மேற்கொள்ள என புதிய இலக்கத்தினை அறிமுகப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் மொழியில் முறைப்பாட்டினை மேற்கொள்ள 107 அவசர இலக்கம் அறிமுகம். தமிழ்மொழியில் முறைப்பாட்டினை மேற் கொள்ள என 107 அவசர இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டு நாளைய தினத்தில் இருந்து முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் எண்ணக்கருவின் ஆலோசனைக்கு அமைய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ் மற்றும் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அவர்களாலும் அவசர இலக்கம் தமிழ்மொழியில் தொலைபேசி மூலமாக முறைப்பாடுகள் நாளைய தினத்தில் இருந்து நடைமுறைப்படுத்தும் செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.தமிழ் மொழி மூலம் முறைப்பாடுகளை மேற்கொள்ள அவசர இலக்கமான 107 எனும் இலக்கம் நாளைய தினத்திலிருந்து நடைமுறைக்கு வருவதுடன் பயிற்சி அளிக்கப்பட்ட தமிழ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அத்தோடு பொதுமக்கள் சந்திப்புக்கு நாளையதினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தால் மக்கள் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.வன்னி பிரதி பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் இருக்கும் போது 2016 ஆம் ஆண்டு தமிழ்மொழியில் முறைப்பாட்டினை மேற்கொள்ள என புதிய இலக்கத்தினை அறிமுகப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.