• May 19 2024

சித்தியின் கொடுமை காரணமாக பொலிஸ் நிலையம் சென்ற 11 வயது சிறுமி!

Chithra / Feb 5th 2023, 8:07 am
image

Advertisement

சித்தியின் கொடுமை காரணமாக 11 வயது சிறுமியொருவர் பொலிஸ் நிலையத்திற்கு வந்து முறைப்பாடு செய்துள்ளதாக ஹொரொவ்பொத்தானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமியின் தாய் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், பின்னர் அவரது தந்தை ஒரு மகள் உள்ள கணவனை இழந்த பெண்ணை திருமணம் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பொலிஸாரிடம் வந்த சிறுமி, தனது சித்தி தனது மகளை மிகவும் அன்பாக நடத்துவதாகவும், தன்னை துஷ்பிரயோகம் செய்வதாகவும் கூறியதாகவும், சித்தியின் தொல்லை தாங்க முடியவில்லையெனவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.


சிறுமியின் வீட்டிலிருந்து பொலிஸ் நிலையம் சுமார் நான்கு கிலோமீற்றர் தூரத்தில் உள்ளதாகவும், அந்த தூரத்தை அவர் நடந்தே சென்று இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, சிறுமியின் சித்தியான நாற்பத்தொரு வயதுடைய பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் இன்று (05) மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். 

சித்தியின் கொடுமை காரணமாக பொலிஸ் நிலையம் சென்ற 11 வயது சிறுமி சித்தியின் கொடுமை காரணமாக 11 வயது சிறுமியொருவர் பொலிஸ் நிலையத்திற்கு வந்து முறைப்பாடு செய்துள்ளதாக ஹொரொவ்பொத்தானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சிறுமியின் தாய் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், பின்னர் அவரது தந்தை ஒரு மகள் உள்ள கணவனை இழந்த பெண்ணை திருமணம் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு பொலிஸாரிடம் வந்த சிறுமி, தனது சித்தி தனது மகளை மிகவும் அன்பாக நடத்துவதாகவும், தன்னை துஷ்பிரயோகம் செய்வதாகவும் கூறியதாகவும், சித்தியின் தொல்லை தாங்க முடியவில்லையெனவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.சிறுமியின் வீட்டிலிருந்து பொலிஸ் நிலையம் சுமார் நான்கு கிலோமீற்றர் தூரத்தில் உள்ளதாகவும், அந்த தூரத்தை அவர் நடந்தே சென்று இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இதன்படி, சிறுமியின் சித்தியான நாற்பத்தொரு வயதுடைய பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் இன்று (05) மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.இந்நிலையில், குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement