• Dec 01 2024

சீரற்ற வானிலையால் இரத்து செய்யப்பட்ட 12 விமானங்கள்..!

Chithra / Dec 1st 2024, 8:59 am
image

 

சீரற்ற வானிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சென்னை விமான நிலையத்தின் விமானச் சேவைகள் இன்று அதிகாலை முதல் வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

எனினும், சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி மற்றும் அந்தமான் செல்ல வேண்டிய விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. 

சென்னையிலிருந்து அந்தமானின் போர்ட் பிளேயர், டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானங்களில் சேவை இரத்து செய்யப்பட்டது. 

பல்வேறு நகரங்களிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வர வேண்டிய 12 விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. 

கோலாலம்பூர், சிங்கப்பூர், அபுதாபி, துபாய் உள்ளிட்ட 6 சர்வதேச விமானங்கள் உள்ளிட்ட 12 விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. 

இதேவேளை, சென்னை விமான நிலையத்திற்கு வர வேண்டிய 26 பன்னாட்டு விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதம் ஆனதாகவும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சீரற்ற வானிலையால் இரத்து செய்யப்பட்ட 12 விமானங்கள்.  சீரற்ற வானிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சென்னை விமான நிலையத்தின் விமானச் சேவைகள் இன்று அதிகாலை முதல் வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி மற்றும் அந்தமான் செல்ல வேண்டிய விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. சென்னையிலிருந்து அந்தமானின் போர்ட் பிளேயர், டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானங்களில் சேவை இரத்து செய்யப்பட்டது. பல்வேறு நகரங்களிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வர வேண்டிய 12 விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. கோலாலம்பூர், சிங்கப்பூர், அபுதாபி, துபாய் உள்ளிட்ட 6 சர்வதேச விமானங்கள் உள்ளிட்ட 12 விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. இதேவேளை, சென்னை விமான நிலையத்திற்கு வர வேண்டிய 26 பன்னாட்டு விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதம் ஆனதாகவும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement