கந்தகெட்டிய – உள்ள போபிட்டிய வீதியில் வெவெதென்ன பகுதியில் இன்று (17) காலை இடம்பெற்ற விபத்தில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தனியார் பேருந்தும் ஆடைத் தொழிற்சாலையிலிருந்து வந்த குழுவை ஏற்றிச் சென்ற வேனும் மோதியதில் எட்டு இளம் பெண்கள் உட்பட 12 பேர் கந்தகெட்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர்களில் ஏழு பேர் மேலதிக சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கந்தகெட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் கந்தகெட்டிய மற்றும் வேவெதென்னவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறுகிய சாலையின் வளைவுப் பகுதியில் இரண்டு வாகனங்களும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
போபிட்டிய வீதியில் பேருந்தும் வானும் மோதி விபத்து - 12 பேர் படுகாயம் கந்தகெட்டிய – உள்ள போபிட்டிய வீதியில் வெவெதென்ன பகுதியில் இன்று (17) காலை இடம்பெற்ற விபத்தில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.தனியார் பேருந்தும் ஆடைத் தொழிற்சாலையிலிருந்து வந்த குழுவை ஏற்றிச் சென்ற வேனும் மோதியதில் எட்டு இளம் பெண்கள் உட்பட 12 பேர் கந்தகெட்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அவர்களில் ஏழு பேர் மேலதிக சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கந்தகெட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.விபத்தில் காயமடைந்தவர்கள் கந்தகெட்டிய மற்றும் வேவெதென்னவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.குறுகிய சாலையின் வளைவுப் பகுதியில் இரண்டு வாகனங்களும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.