• Nov 28 2024

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன் -12 பேர் உயிரிழப்பு!

Tamil nila / Jun 15th 2024, 7:12 pm
image

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்  ஒன்று விபத்துக்குள்ளாயுள்ளது.

சுற்றுலா பயணிகள் சென்ற வேன் ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் அதில் பயணித்த 12 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது 

குறித்த விபத்து சம்பவங்கள் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் சோப்டா என்ற பிரபல சுற்றுலா நகரம் அமைந்துள்ளது. 

இந்த நகரத்திற்கு செல்வதற்காக பத்ரிநாத் நெடுஞ்சாலையில் சுற்றுலா ட்ராவலர் வேன் ஒன்றில் 17 சுற்றுலா பயணிகள் சென்று கொண்டிருந்தனர். 

அலக்நந்தா ஆற்றின் கரையோரம் உள்ள சாலையில் வேன் பயணித்துக் கொண்டிருந்தபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகில் உள்ள பாரிய பள்ளத்தில் கவிழ்ந்து ஆற்றுக்குள் விழுந்தது.

இந்த விபத்தில் வேனில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

படுகாயம் அடைந்த 5 பேர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் பொலிஸார் வாகனத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சுமார் 100 அடிக்கும் கீழ் வேன் கவிழ்ந்து உருண்டு விழுந்து விபத்திற்குள்ளாகி இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடிய அச்சம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன் -12 பேர் உயிரிழப்பு 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்  ஒன்று விபத்துக்குள்ளாயுள்ளது.சுற்றுலா பயணிகள் சென்ற வேன் ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் அதில் பயணித்த 12 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது குறித்த விபத்து சம்பவங்கள் தொடர்பில் மேலும் தெரியவருகையில் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் சோப்டா என்ற பிரபல சுற்றுலா நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்திற்கு செல்வதற்காக பத்ரிநாத் நெடுஞ்சாலையில் சுற்றுலா ட்ராவலர் வேன் ஒன்றில் 17 சுற்றுலா பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அலக்நந்தா ஆற்றின் கரையோரம் உள்ள சாலையில் வேன் பயணித்துக் கொண்டிருந்தபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகில் உள்ள பாரிய பள்ளத்தில் கவிழ்ந்து ஆற்றுக்குள் விழுந்தது.இந்த விபத்தில் வேனில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த 5 பேர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் பொலிஸார் வாகனத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.சுமார் 100 அடிக்கும் கீழ் வேன் கவிழ்ந்து உருண்டு விழுந்து விபத்திற்குள்ளாகி இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடிய அச்சம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement