• Jan 16 2025

12 மியன்மார் அகதிகளும் கேப்பாபுலவு விமானப் படைத்தளத்திலுள்ள உறவினர்களுடன் இணைப்பு

Tharmini / Jan 7th 2025, 5:10 pm
image

மியன்மாரில் இருந்து  வந்த அகதிபடகில் ஆட்கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என  கைதுசெய்யப்பட்டு விளக்கமறியறில் வைக்கப்பட்ட 12 மியன்மார் அகதிகளும் இன்று (07) விடுதலையாகி  கேப்பாபுலவு  இடைத்தங்கல் முகாமிற்கு  அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக இலங்கை கடலுக்குள் நுழைந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு மியன்மார் அகதிகள் 12 பேர் சட்டவிரோத படகு பயணத்திற்கு செயற்பட்டதாக கைது செய்யப்பட்டு  திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த12 பேரும் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கேப்பாபுலவு விமானப் படைத்தளத்திற்கு கடந்த  (23.12.2024) மாலை 5 மணியளவில் மியன்மார் அகதிகள் 103 பேர்  அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து  இன்றையதினம் தடுப்புகாவலில் வைக்கப்பட்ட ஏனைய 12 பேரும் விடுதலையாகி குறித்த  முகாமிற்கு தங்கவைக்க அழைத்து வரப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பரப்பில் கடந்த 19 ஆம் திகதி 115 பயணிகளுடன் 

மியன்மார் அகதிகள் படகு கரை ஒதுங்கியிருந்தது. பின்னர் கப்பல் கரைக்கு வர முடியாத நிலையில் கடற்படையினரின் உதவியுடன் 

திருகோணமலை கடற்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அவர்கள் திருகோணமலை ஐமாலிய முஸ்லீம் மகாவித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் தஞ்சம் கோரிய 115 முஸ்லீம் இனத்தினை சேர்ந்த மியன்மார் அகதிகளும்

மிரிஹானை இடைத்தங்கல் முகாமில் தங்கவைப்பதற்கான இடவசதி இல்லாத காரணத்தினால் இவர்களில் 103 பேர் இரண்டு பேருந்துகளில் மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை தளம் ஒன்றில் தற்காலிகமாக தங்கவைக்க அழைத்து வரப்பட்டுள்ளனர்.

குறித்த படகில் 45 சிறுவர்கள்,24 பெண்கள்,46 ஆண்கள் உள்ளடங்கலாக 115 பேர் பயணித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.





12 மியன்மார் அகதிகளும் கேப்பாபுலவு விமானப் படைத்தளத்திலுள்ள உறவினர்களுடன் இணைப்பு மியன்மாரில் இருந்து  வந்த அகதிபடகில் ஆட்கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என  கைதுசெய்யப்பட்டு விளக்கமறியறில் வைக்கப்பட்ட 12 மியன்மார் அகதிகளும் இன்று (07) விடுதலையாகி  கேப்பாபுலவு  இடைத்தங்கல் முகாமிற்கு  அழைத்து வரப்பட்டுள்ளனர்.சட்டவிரோதமாக இலங்கை கடலுக்குள் நுழைந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு மியன்மார் அகதிகள் 12 பேர் சட்டவிரோத படகு பயணத்திற்கு செயற்பட்டதாக கைது செய்யப்பட்டு  திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த12 பேரும் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.கேப்பாபுலவு விமானப் படைத்தளத்திற்கு கடந்த  (23.12.2024) மாலை 5 மணியளவில் மியன்மார் அகதிகள் 103 பேர்  அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து  இன்றையதினம் தடுப்புகாவலில் வைக்கப்பட்ட ஏனைய 12 பேரும் விடுதலையாகி குறித்த  முகாமிற்கு தங்கவைக்க அழைத்து வரப்பட்டுள்ளனர்.முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பரப்பில் கடந்த 19 ஆம் திகதி 115 பயணிகளுடன் மியன்மார் அகதிகள் படகு கரை ஒதுங்கியிருந்தது. பின்னர் கப்பல் கரைக்கு வர முடியாத நிலையில் கடற்படையினரின் உதவியுடன் திருகோணமலை கடற்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அவர்கள் திருகோணமலை ஐமாலிய முஸ்லீம் மகாவித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.பின்னர் தஞ்சம் கோரிய 115 முஸ்லீம் இனத்தினை சேர்ந்த மியன்மார் அகதிகளும்மிரிஹானை இடைத்தங்கல் முகாமில் தங்கவைப்பதற்கான இடவசதி இல்லாத காரணத்தினால் இவர்களில் 103 பேர் இரண்டு பேருந்துகளில் மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை தளம் ஒன்றில் தற்காலிகமாக தங்கவைக்க அழைத்து வரப்பட்டுள்ளனர்.குறித்த படகில் 45 சிறுவர்கள்,24 பெண்கள்,46 ஆண்கள் உள்ளடங்கலாக 115 பேர் பயணித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

Advertisement

Advertisement

Advertisement